Tamilnadu

அமைச்சரவை மாற்றம் : ஆளுநர் மாளிகையில் புதிதாக பதவியேற்றுக்கொண்ட 4 அமைச்சர்கள்!

தமிழ்நாடு அமைச்சரவையை மாற்றியமைக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை ஆளுநரிடம் பரிந்துரை செய்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சரவை மாற்றத்திற்கு நேற்று (செப். 28) ஒப்புதல் அளித்தார். இந்த ஒப்புதலை தொடர்ந்து இன்று அமைச்சரவையில் புதிதாக இடம்பெறும் அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் பதவியேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் மாளிகையில் இரா.ராஜேந்திரன், வி.செந்தில் பாலாஜி, கோவி.செழியன், சா.மு.நாசர் ஆகிய 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதில் செந்தில் பாலாஜி மற்றும் நாசர் ஆகியோர் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் ஆவர். புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளவர்களுக்கு ஆளுநர் ரவி பதவி பிராமணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களான

* வி.செந்தில் பாலாஜி - மீண்டும் மின்சாரத்துறை,

* கோவி. செழியன் - உயர்கல்வித்துறை,

* இரா.ராஜேந்திரன் - சுற்றுலாத்துறை,

* சா.மு.நாசர் - சிறுபான்மையினர் நலத்துறை

வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டதோடு, அமைச்சர்களாக இருந்த மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் 7 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றப்பட்டுள்ளது. அவை வருமாறு :

* துணை முதலமைச்சர் உதயதி ஸ்டாலின் - விளையாட்டுதுறை மற்றும் திட்டமிடல் மற்றும் வளர்ச்சி துறை

* அமைச்சர் க.பொன்முடி - வனத்துறை

* அமைச்சர் தங்கம் தென்னரசு - நிதி, காலநிலை மாற்றத்துறை

* அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

* அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் - மனிதவள மேம்பாட்டுத்துறை

* அமைச்சர் எம்.மதிவேந்தன் - ஆதிதிராவிடர் நலத்துறை

* அமைச்சர் ராஜகண்ணப்பன் - பால்வளத்துறை

- என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மாநிலத்திற்கு செழிப்பையும், நலனையும் கொண்டு வருவார்! : துணை முதலமைச்சர் உதயநிதிக்கு குவியும் பாராட்டுகள்!