Tamilnadu

அமைச்சரவை மாற்றம் : புதிதாக 4 அமைச்சர்கள் பதவியேற்பு - எந்தெந்த அமைச்சர்களுக்கு, எந்தெந்த துறை ?

தமிழ்நாடு அமைச்சரவையை மாற்றியமைக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை ஆளுநரிடம் பரிந்துரை செய்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சரவை மாற்றத்திற்கு நேற்று (செப். 28) ஒப்புதல் அளித்தார். இந்த ஒப்புதலை தொடர்ந்து இன்று அமைச்சரவையில் புதிதாக இடம்பெறும் அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் இன்று (செப்.29) பதவியேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் மாளிகையில் இரா.ராஜேந்திரன், வி.செந்தில் பாலாஜி, கோவி.செழியன், சா.மு.நாசர் ஆகிய 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளவர்களுக்கு ஆளுநர் ரவி பதவி பிராமணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகாக்கள் பின்வருமாறு :

* வி.செந்தில் பாலாஜி - மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை,

* கோவி. செழியன் - உயர்கல்வித்துறை, (தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட உயர்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்)

* ஆர்.இராஜேந்திரன் - சுற்றுலாத்துறை (சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சர்க்கரை, கரும்புத்தீர்வை, கரும்புப்பயிர் மேம்பாடு)

* சா.மு.நாசர் - சிறுபான்மையினர், வெளிநாடுவாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃக்ப் வாரியம் துறை,

- வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டதோடு, அமைச்சர்களாக இருந்த மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் 7 அமைச்சர்களுக்கு இலாகா மாற்றப்பட்டுள்ளது. அவை வருமாறு :

* துணை முதலமைச்சர் உதயதி ஸ்டாலின் - விளையாட்டுத்துறை மற்றும் திட்டமிடல் மற்றும் வளர்ச்சி துறை

* அமைச்சர் க.பொன்முடி - வனத்துறை

* அமைச்சர் தங்கம் தென்னரசு - நிதி, காலநிலை மாற்றத்துறை

* அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

* அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் - மனிதவள மேம்பாட்டுத்துறை

* அமைச்சர் எம்.மதிவேந்தன் - ஆதிதிராவிடர் நலத்துறை

* அமைச்சர் ராஜகண்ணப்பன் - பால்வளத்துறை

- என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அமைச்சரவை மாற்றம் : ஆளுநர் மாளிகையில் புதிதாக பதவியேற்றுக்கொண்ட 4 அமைச்சர்கள்!