Tamilnadu

நாய்கள் வளர்ப்புக்கு என பிரத்யேக மாநிலக் கொள்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு : முழு விவரம் உள்ளே !

தமிழ்நாட்டில் வளப்பு நாய்களால் தெருவில் உள்ளோர் மற்றும் சாலையில் செல்வோர் சில பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். மேலும் நோய் வாய்ப்பட்ட வளப்பு நாய்களை அதன் உரிமையாளர்கள் தெருவில் ஆதரவின்றி விட்டுசெல்லும் நிலையும் தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில். நாய்கள் வளர்ப்புக்கு என பிரத்யேக மாநிலக் கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் :

  • நாய்களை வளர்ப்பதற்கு விரும்புவோர் அதற்கென உரிய உரிமத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து பெற வேண்டும்.

  • வளர்ப்பவர்களும் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்திடம் இருந்து உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

  • உரிமம் பெற்ற அனைவரும் அவற்றை தங்களது வசிப்பிடப் பகுதிகளில் அனைவரும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.

  • நாய் விற்பனை செய்யும் கடைகளுக்கு உரிய உரிமம் பெற்றிருப்பதுடன், விலங்குகள் நல வாரியத்தின் உரிமம் வைத்திருப்பவர்களிடம் இருந்து மட்டுமே நாய்களைப் பெற்று விற்க வேண்டும்.

  • நாய் வளர்ப்பவர்கள் உரிய விண்ணப்பத்துடன் ரூ.5 ஆயிரம் பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

  • நாட்டு நாய்களாக இருக்கும் பட்சத்தில் பதிவுக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டு ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்படும்.

  • நாய்கள் வளர்ப்புக்கான இடங்கள், கட்டடங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் பதிவுக்கான செல்லுபடியாகும் காலம் இரண்டு ஆண்டுகளாகும்.

  • நாய் வளர்ப்பவர்கள் தனி நபர், விற்பனையாளர், ஒரு விற்பனை நிறுவனத்துக்கான உரிமையாளர் என யாராக இருந்தாலும் அவர்களுக்கான வயது 18 ஆக இருக்க வேண்டும்.

  • 8 ஆண்டுகளுக்கு மேலுள்ள நாய்களுக்கு உரிமம் வழங்கப்படாது. ஆண் நாய்களாக இருக்கும்பட்சத்தில், 10 முதல் 12 ஆண்டுகளாக இருந்தால் அவற்றுக்கான உடல்திறன் சான்று அடிப்படையில் உரிமம் தரப்படும்.

  • நாய்கள் வளர்க்கக் கூடிய கட்டடங்கள், நிறுவனங்களில் விலங்கள் நல வாரியத்தின் அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வுகளில் ஈடுபடுவர் என்று கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மந்தமாக நடைபெறும் சென்னை கடற்கரை- எழும்பூர் 4வது ரயில் பாதை திட்டம்: ரயில்வே துறைக்கு பொதுமக்கள் கண்டனம்!