Tamilnadu
“விளையாட்டிலும் தமிழ்நாட்டை பிற மாநிலங்கள் திரும்பிப் பார்க்கின்றனர்” - அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!
சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை-2024 விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற 2,830 வீரர், வீராங்கனைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 5 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், பொதுப் பிரிவினர் மற்றும் அரசு பணியாளர்கள் என 5 பிரிவுகளில் ஆண் / பெண் இருபாலரும் பங்கு பெற்றத்தில், 16,607 மாணவர்கள் ஆண்களும். 8.812 மாணவிகள் /பெண்களும், மொத்தம் 25,419 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
மேலும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளானது பள்ளி மற்றும் கல்லுரி பிரிவுகளில் கடற்கரை கையுந்துபந்து, குத்துசண்டை, பளு தூக்குதல், வாள்விளையாட்டு, ஜூடோ டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளில், 1089 மாணவர்களும், 417 மாணவிகளும், மொத்தம் 1506 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளில் - தனிநபர் போட்டிகளில் முதல் இடத்தை பெற்றவர்களும், குழு போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட அணியின் வீரர் வீராங்கனைகளும். மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் முதல் நான்கு இடத்தை பெற்ற வீரர் வீராங்கனைகளும் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்கள்.
மேலும் இதற்கான மாநில போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி. கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 04.10.2024 அன்று தொடங்கி 24.10.2024 வரை நடைபெற உள்ளது. மாவட்ட, மண்டல அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2024 விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.3000, இரண்டாம் பரிசாக தலா ரூ.2000, மூன்றாம் பரிசாக தலா ரூ.1000 சான்றிதழ், மற்றும் பதக்கமும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து விழா மேடையில் அமைச்சர் சேகர் பாபு பேசியதாவது, “கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய மாணவர்களின் திறமைகளை வெளி உலகத்திற்கு கொண்டு வருவதற்காகவும், திறமையானவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காகவும் முதல்வர் தீட்டிய திட்டம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் தமிழ்நாட்டை பிற மாநிலங்கள் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு வெளிச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் இன்று, தமிழ்நாடு பலவகையில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்து வருகிறது. விளையாட்டுக்கு சிறந்த மாநிலமாக, விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. பல்வேறு வகையில் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவாதமாக இருப்பார்” என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!