Tamilnadu
🔴Live| காஞ்சிபுரத்தில் கோலாகலமாக தொடங்கிய திமுக பவள விழா பொதுக்கூட்டம் : கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!
பாஜகவின் பகல் கனவு எப்போதும் பலிக்காது!
“தமிழ்நாட்டில் உருவான திமுக தலைமையிலான கூட்டணியை பார்த்துதான் அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. நமது கூட்டணி தேர்தல் நேரத்தில் தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல; கொள்கைக்காக உருவான கூட்டணி. இந்திய கூட்டணியின் ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் நினைக்கிறார்கள். பாஜகவின் பகல் கனவு எப்போதும் பலிக்காது!”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
கொள்கையில் இம்மி அளவும் மாறாமல் செயல்படுகிறோம்!
கழகத்தின் வெற்றியால் தமிழ்நாட்டை வளர்த்தார் பேரறிஞர் அண்ணா. அவரின் இதயத்தை இரவலாகப் பெற்ற முத்தமிழறிஞர் கலைஞர், அரை நூற்றாண்டு காலம் தி.மு.க.வையும், அதன் வழி தமிழ்நாட்டையும் வளர்த்தார். முத்தமிழறிஞர் கலைஞர் பாதையிலிருந்து இம்மி அளவும் மாறாமல், நாம் இப்போது செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது!
“ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களை யூனியன் பிரதேசமாக மாற்ற முயற்சிகிறது. மாநிலங்களை ஒடுக்கி ஒன்றை தன்மையுடைய ஆட்சியை கொண்டுவர ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை பாஜக அரசு கொண்டுவரப்படுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லாதது.”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
புகழ்மாலையில் கூட்டணிக்கும் பங்கு இருக்கிறது!
“திமுக பவளவிழா கூட்டத்தில் வாழ்த்து வழங்கிய கூட்டணி கட்சித் தலைவர்களால் நாங்கள் பெருமை அடைகிறோம். எங்களுக்கு வரும் வாழ்த்தில் உங்களுக்கும் பங்கு உண்டு. நாங்கள் படைத்த சாதனைக்கு நீங்கள் உறுதுணையாக இருந்துள்ளீர். இந்த அரசுக்கு கிடைத்த புகழ்மாலையில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு இருக்கிறது.”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
“தி.மு.க என்ற மூன்றெழுத்தில் தான் நம் மூச்சும், பேச்சும், உயிரும், உணர்வும் அடங்கியிருக்கிறது.”
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஒரே தேர்தல் என்று சொல்வதற்கு வெட்கமா இல்லையா?
“நாடாளுமன்றத் தேர்தலைக்கூட ஒரே கட்டமாக நடத்த முடியாதவர்கள் தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து பேசுகிறார்கள். 'கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவேனு’ சொல்வது போல இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் 90 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3 கட்டங்களாக தேர்தலை நடத்துகிறது ஒன்றிய அரசு. இந்த லட்சணத்தில் ஒரே தேர்தல் என்று சொல்வதற்கு வெட்கமா இல்லையா?”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நம் கூட்டணி - கொள்கைக் கூட்டணி!
“சில கூட்டணிகளை உருவாக்கும் கட்சிகள், தேர்தல் நேரத்தில் உருவாகி, பின் கலைந்துவிடும். ஆனால், நம் கூட்டணி அப்படி அல்ல. தமிழ்நாட்டில் நாம் அமைத்த வெற்றிக் கூட்டணியைப் பார்த்து தான், அகில இந்திய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்த இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது.”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
திமுகவை வையகமே வாழ்த்துகிறது!
“1949ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா, அவருடைய தம்பிமார்களுடன் இணைந்து, தி.மு.க.வை தொடங்கிய போது வான் மழை பொழிந்தது. அவ்வாறு வான் மழை வாழ்த்துடன் தொடங்கிய தி.மு.க, இன்று வையகமே வாழ்த்தும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
பாஜகவின் பகல் கனவு எப்போதும் பலிக்காது!
“தமிழ்நாட்டில் உருவான திமுக தலைமையிலான கூட்டணியை பார்த்துதான் அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது. நமது கூட்டணி தேர்தல் நேரத்தில் தேர்தலுக்காக உருவான கூட்டணி அல்ல; கொள்கைக்காக உருவான கூட்டணி. இந்திய கூட்டணியின் ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் நினைக்கிறார்கள். பாஜகவின் பகல் கனவு எப்போதும் பலிக்காது!”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
வரலாற்று பின்னணி கொண்டவர்கள் நாம்!
“தலைசிறந்த மூத்த நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள் நாம்தான். நமக்கென்று ஒரு மொழி உண்டு. நமக்கென்று ஒரு இனம் உண்டு, படை உண்டு, நாடு உண்டு என சொல்லிக்கொடுத்த அண்ணாவின் வழியில் இன்று பவளவிழா கொண்டாடி வருகின்றோம். வரலாற்றோடு பின்னிப் படர்ந்த கட்சி திமுக .”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேச்சு!
தி.மு.கவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது!
”போராட்டக் களத்தில் பூத்த மலர் தி.மு.க இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் ஒரு போதும் அசைத்துப் பார்க்க முடியாது. திராவிடம் வெல்லும், அதை என்றைக்கும் வரலாறுச் சொல்லும்.”
- தி.மு.க பவள விழா பொதுக்கூட்டத்தில் திராவிட கழகத் தலைவர் ஆசிரியர். கி.வீரமணி பேச்சு!
முதலமைச்சருக்கு மெய்க்காப்பாளனாக இருப்பேன்!
“மாணவர் பருவத்தில் தாங்கிய கொள்கைகளைக் கடைசி வரை பின் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில், திராவிட முன்னேற்றக்கழகத்துடன் கூட்டணி வைத்து, கலைஞரைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டானிக்கும் மெய்க்காப்பாளனாக இருப்பேன் என உறுதிபூண்டுள்ளேன்.”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பேச்சு!
திராவிட நாகரிகம் தான் சிறந்தது!
“திராவிடம் என்று சொன்னாலே இன்று சிலருக்கு எரிச்சல் ஏற்படுகிறது. இது எதோ இடையில் உருவான வார்த்தை அல்ல. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் திராவிட நாகரிகம் ஆகும். ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்திற்கு முன்பே உருவானது திராவிட நாகரிகம். திராவிட நாகரிகம் தான் சிறந்தது என்று ஜான் மார்ஷல் சொல்லியிருக்கிறார்
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேச்சு!
இந்தியாவே திரும்பி பார்க்கும் சிங்கம்!
”75 ஆண்டுகள் நெருப்பாற்றில் நீந்தி வளர்ந்து வந்த இயக்கம் தி.மு.க. அதனால்தான் இந்தியாவே திரும்பி பார்க்கும் சிங்கமாக நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு அமர்ந்திருக்கிறார். இந்த இயக்கம் இன்னும் பலநூறு ஆண்டுகள் இருக்க வேண்டும். ”
- தி.மு.க பவள விழா பொதுக்கூட்டத்தில் திராவிட கழகத் தலைவர் ஆசிரியர். கி.வீரமணி பேச்சு!
இந்தியா போற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
”கருவறை முதல் கல்லறை வரை திட்டம் தீட்டிய ஒரே முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர். சமூகநீதியை ஒரு கண்ணாகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மற்றொரு கண்ணாகவும் பார்ப்பதால்தான் இன்று இந்தியா போற்றும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.”
- தி.மு.க பவள விழா பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு!
வள்ளல் போல் செயல்படும் முதலமைச்சர்!
” 7 முறை தி.மு.க ஆட்சியில் இருந்துள்ளது. ஒரு முறை அண்ணா, 5 முறை கலைஞர். இப்போது நமது முதலமைச்சர். இவர்கள் கொடுத்த சமூக நீதி திட்டங்கள்தான் தமிழ்நாட்டின் பரிணாம வளர்ச்சிக்கு காரணம். ஏழாவது கடை வள்ளல் நள்ளிபோல் இன்று லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்."
- தி.மு.க பவள விழா பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு!
அரசியலின் திசையை தீர்மானித்தது திமுக!
“இந்தியா கூட்டணிக்கு முதல் விதை போட்டது திமுக கூட்டணிதான். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியை துடைத்தெறிந்த கட்சி திமுக. இந்திய அரசியலின் திசை வழியை தீர்மானித்ததில் மிக முக்கிய பங்கு திமுகவுக்கு உண்டு.”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு!
75 ஆண்டுகளாக வெற்றிநடைபோடும் தி.மு.க!
“பவளவிழா காணும் தி.மு.க, இந்திய அளவில் அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் வழிகாட்டும், மகத்தான பேரியக்கம். வெறும் தேர்தல் அரசியலை முன்னிறுத்தி, அதிகாரத்தை நோக்கிய சராசரி கட்சியாக, தி.மு.க இயங்காததால் தான், 75 ஆண்டுகளாக வீருகொண்டு வெற்றிநடைபோட்டு வருகிறது.”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு!
அனைவரையும் அரவணைக்கும் கட்சி திமுக!
“இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் திருப்புமுனைக்கு திமுக இயக்கம் ஆற்றிய பங்களிப்பு மிகப்பெரியது. திமுகவின் பங்களிப்பை யாரும் மறக்கமுடியாது. எதிரும் புதிரும் ஆக இருக்கும் இரண்டு கட்சிகளையும் ஒரே மேடையில், ஒரே அணியில் கொண்டுவந்தது திமுகதான். அனைவரையும் அரவணைத்து செல்லும் கட்சி திமுக”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு!
சுயமரியாதை முரசு கொட்டும் இயக்கம் தி.மு.க!
”கட்சி தொடங்கி 15 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த இயக்கம் தி.மு.க. விலைவாசி உயர்வு, இந்தி திணிப்பு என பல போராட்டங்களை நடத்தி அண்ணா, கலைஞர் பல மாதங்கள் சிறையில் இருந்தனர். இப்படி போராடி தியாகங்கள் செய்துதான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. சுயமரியாதை, மாநில உரிமைகள் முரசு கொட்டும் இயக்கம் தி.மு.க.”
- தி.மு.க பவள விழா பொதுக்கூட்டத்தில் CPI மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேச்சு!
தி.க. - தி.மு.க.வுடன் மூன்றாவது குழலாக வி.சி.க இருக்கும்!
“விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிடர் கழகம் ஆகிய இரட்டை குழல் துப்பாக்கியுடன் இணைந்து மூன்றாவது குழலாக இருக்கும். தொடர்ந்து இந்த களத்தில், தி.மு.க.வுடன் இணைந்து சனாதன சக்திகளுக்கு எதிராக முழங்குவோம்.”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உறுதி!
சுயமரியாதையை முரசு கொட்டிய இயக்கம் தி.மு.க!
”கட்சி தொடங்கி 15 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த இயக்கம் தி.மு.க. விலைவாசி உயர்வு, இந்தி திணிப்பு என பல போராட்டங்களை நடத்தி அண்ணா, கலைஞர் பல மாதங்கள் சிறையில் இருந்தனர். இப்படி போராடி தியாகங்கள் செய்துதான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. சுயமரியாதை, மாநில உரிமைகளை முரசு கொட்டிய இயக்கம் தி.மு.க.”
- தி.மு.க பவள விழா பொதுக்கூட்டத்தில் CPI மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேச்சு!
ஈட்டிமுனைபோல் இருக்கும் தி.மு.க!
”பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, எங்கள் கொள்கையில் நாங்கள் உறுதியாக இருப்போம் என்று டெல்லியில் துணிச்சலுடன் சொன்னவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒன்றிய அரசின் பாசிச நடவடிக்கைகளை ஈட்டிமுனையாக எதிர்த்து வருகிறது தி.மு.க.”
- தி.மு.க பவள விழா பொதுக்கூட்டத்தில் CPI மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேச்சு!
கொள்கைத் தலைமுறைகளைக் கொண்ட தி.மு.க!
“தந்தை பெரியார் வழி தவறாமல், பேரறிஞர் அண்ணா வழியில், முத்தமிழறிஞர் கலைஞரின் பிடிப்பு மாறாது, திராவிட கொள்கைகளைப் பின்பற்றி, திராவிட மாடல் இயக்கமாக, சமூக நீதி இயக்கமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வருகிறது தி.மு.க.”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு!
உழைக்கும் மக்களின் இயக்கம் திமுக !
“எத்தனையோ தடைகளை கடந்து தொடர் வெற்றியை குவிக்கும் திமுக இன்று பவள விழாவைக் கொண்டாடி வருகிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் இயக்கமாக திமுக விளங்குகிறது. விளிம்பு நிலை மக்களுக்கு இட ஒதுக்கீட்டு வழங்கி, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரும்பாடுபட்ட இயக்கம் திமுக”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் பேச்சு!
மு.க.ஸ்டாலின் ஆளுமை தான் காரணம்!
இரு மொழி கொள்கையை வேண்டாம் என்று சொன்ன அண்ணாவின் கொள்கையில் இன்றளவும் உறுதியுடன் நிற்பாவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்கள். மாநிலத்தின் உரிமை மற்றும் சுயாட்சி உரிமை நிலை நிறுத்தியவர் கலைஞர். இந்திரா காந்தி குடியிருப்பு இன்று இந்தியா முழுவதும் உள்ளது என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் கலைஞர் அவர்கள்.
தெருவில் யாசகம் பெரும் மக்களுக்காக பிச்சை கேட்போர் மறுவாழ்வு மையம் என்பதை உருவாக்கியவர் கலைஞர். மிசா நெருக்கடி, இராஜீவ் காந்தி படுகொலை, ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை என பல இக்கட்டான சூழ்நிலைகள் கண்டு 75 ஆண்டுகள் கடந்த இயக்கம்.
பெரியார், அண்ணா, கலைஞர் இப்போது இருந்து இருந்தால், தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சியை பார்த்து உச்சி குளிர்ந்து இருப்பர். சந்தித்த அனைத்து தேர்தலில் கூட்டணியுடன் வென்று என்பது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுமை தான் காரணம்.
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு!
75 ஆண்டுகளாக வெற்றிநடைபோடும் தி.மு.க!
“பவளவிழா காணும் தி.மு.க, இந்திய அளவில் அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் வழிகாட்டும், மகத்தான பேரியக்கம். வெறும் தேர்தல் அரசியலை முன்னிறுத்தி, அதிகாரத்தை நோக்கிய சராசரி கட்சியாக, தி.மு.க இயங்காததால் தான், 75 ஆண்டுகளாக வீறுகொண்டு வெற்றிநடைபோட்டு வருகிறது.”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு!
தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் தி.மு.க!
” அனைவரையும் சமமாக மதித்து பொன்னாடை அணிவிக்கும் கலாச்சாரத்தை உருவாக்கிய பெருமை திமுகவுக்கு உண்டு. அண்ணா, கலைஞர் வழியில் தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தெற்கினால்தான் வடக்கு வாழ்கிறது என்ற நிலையை இன்று
திராவிட மாடல் ஆட்சி உருவாக்கி இருக்கிறது."
- தி.மு.க பவள விழா பொதுக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேச்சு!
மக்களின் பாதுகாப்பு அரண் தி.மு.க!
“விளிம்பு நிலை மக்களுக்கு புறக்கணிக்கப்பட்ட கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை பெற்று தரும் சமூக இயக்கமாகவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது தி.மு.க.”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேச்சு!
சமூகநீதியில் தி.மு.க.விற்கு மேல் யாராலும் செயலாற்ற முடியாது!
“பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திலிருந்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை உருவாக்கி, அவர்களுக்கு 20% இடஒதுக்கீடு, இஸ்லாமியர்களுக்கு 3.5% இடஒதுக்கீடு, கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு, திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கு இடஒதுக்கீடு என சமூகநீதிக்கு ஆதரவாக செயல்படும் ஒரே இயக்கம் தி.மு.க. இந்த இயக்கத்தை போல் சமூக நீதிக்காக இந்தியாவிலேயே வேறு யாராலும் செயல்பட முடியாது.”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் அதியமான்!
உலகின் 8-வது அதிசயம் தி.மு.க!
“திமுக இயக்கம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் கடந்த அதேவேளையில், சமூகநீதிக்கான தளத்தில் 100 ஆண்டுகளை கடந்து இருக்கிறது. 75 ஆண்டுகள் கடந்து திமுக உயிர்ப்புடன் இருக்கிறது என்றால், அரசியல் வரலாற்றில் திமுக இயக்கம் 8வது அதிசயமாக விளங்குகிறது. திமுக இயக்கத்தின் தலைவர்கள் வல்லமைமிக்கவராக திகழ்வதாலே இந்த இயக்கம் இன்றும் செழிப்புடன் திகழ்கிறது.”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், மக்கள் விடுதலை கட்சி நிறுவனத் தலைவர் முருகவேல் ராஜன் பேச்சு!
100ஆவது ஆண்டிலும் தி.மு.க ஆட்சியில் இருக்கும்!
”சமூகநீதிக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து போராடிவரக்கூடிய ஒரே இயக்கம் தி.மு.கதான். இந்த இயக்கத்தின் ஆணிவேரை எந்த மதவாத சக்தியாலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது. நூற்றாண்டு விழா கொண்டாடும் போது தி.மு.கதான் ஆட்சியில் இருக்கும்.”
- தி.மு.க பவள விழா பொதுக்கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ் பேச்சு!
இளமையோடு இருக்கிறது திமுக !
“சமூக நீதி கொள்கையை உள்வாங்கியிருப்பதால் 75 ஆண்டுகள் கடந்தாலும் திமுக இயக்கம் இன்றும் இளமையோடு இருக்கிறது. அடித்தட்டு மக்களை இட ஒதுக்கீட்டு மூலம் அறிவுசார் மக்களாக ஆக்கிய பெருமை திமுக இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. ஒரு சமூகத்தை அறிவுசார் சமூகமாக புரட்டிப்போட்ட சாதனை திமுக இயக்கத்திற்கு உண்டு. திராவிட மாடல் ஆட்சியில் தீட்டப்படும் திட்டங்கள்தான் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது.”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்.குமார் பேச்சு!
தமிழ்நாட்டின் நெல்சன் நெல்சன் மண்டேலா மு.க.ஸ்டாலின்!
”பல இன்னல்களை சகித்துக்கொண்டு, கருப்பின மக்களுக்காக வாழ்நாள்முழுவதும் உழைத்தவர் நெல்சன் மண்டேலா. அவரைப்போலவே தமிழ்நாட்டு மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கும் தமிழ்நாட்டின் நெல்சன் மண்டேலாவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்.குமார் பேச்சு!
தமிழ்நாட்டின் நெல்சன் நெல்சன் மண்டேலா மு.க.ஸ்டாலின்!
”பல இன்னல்களை சகித்துக்கொண்டு, கருப்பின மக்களுக்காக வாழ்நாள்முழுவதும் உழைத்தவர் நெல்சன் மண்டேலா. அவரைப்போலவே தமிழ்நாட்டு மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் உழைக்கும் தமிழ்நாட்டின் நெல்சன் மண்டேலாவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார் பேச்சு!
சமூக மாற்றத்திற்கான இயக்கம் தி.மு.க!
“இந்தியாவில் எத்தனையோ மாநிலக்கட்சிகள் உருவாகின. ஆனால், 75 ஆண்டுகளுக்கு முன்பு இளமைத்துடிப்போடு, கொள்கைப் பற்றோடு உருவாக்கப்பட்ட தி.மு.க, அதன் 5ஆம் தலைமுறையை எட்டும் வேளையிலும் அதே துடிப்போடு இருக்கிறது. காரணம், தி.மு.க வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல, சமூக மாற்றத்திற்கான இயக்கம்.”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி பேச்சு!
தமிழர்களின் கேடயம் தி.மு.க!
”2000 ஆண்டுகளுக்கு இந்த மண்ணில் நீடித்த தீண்டாமை எனும் கொள்ளை நோய்க்கும், ஆதிக்கம் எனும் தொற்று நோய்க்கும், ஏற்றத்தாழ்வு எனும் புற்றுநோய்க்கும் 75 ஆண்டுகளாக தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கிறது தி.மு.க. தமிழுக்கும், தமிழருக்கும் உண்டான பங்கையும், மரியாதையையும் வேற்றுசக்திகள் கெடுக்க நினைத்தால் அதை தடுக்க பாய்ந்து வரும் தமிழர்களின் கேடயம் தி.மு.க”
- தி.மு.க பவள விழா பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் வாழ்த்துக் கடிதத்தை வாசித்த அக்கட்சி நிர்வாகி மவுரியா!
எந்த மாநில கட்சியும் 75 ஆண்டுகள் இயங்கியதில்லை!
“திமுகவின் 50 ஆண்டு வரலாறு முத்தமிழறிஞர் கலைஞரால் கொண்டாடப்பட்டது. 75 ஆண்டுகள் வரலாற்றை நிறைவு செய்து சாதனை படைத்த திமுக இயக்கத்தின் பவள விழாவை, பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் கொண்டாடி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தியாவில் எந்த மாநில கட்சியும் 75 ஆண்டுகள் இயங்கியதில்லை.”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் பேச்சு!
கலைஞரின் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“அனைத்து சமூக மக்களும் முன்னேற பல்வேறு திட்டங்களை முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்தவர். கலைஞரின் வழிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்பற்றி செயல்படுத்தி வருகிறார்.”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் பி.என்.அம்மாசி பேச்சு!
தமிழினத்திற்காக உருவான இயக்கம் திமுக!
“தாழ்த்தப்பட்ட, அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு அவர்களின் வாழ்வுரிமைக்காக குரல் கொடுத்த பேரியக்கம் திமுகதான். இது ஒரு சிலருக்காக உருவான அமைப்பு அல்ல; ஒட்டுமொத்த தமிழினத்திற்காக உருவான இயக்கம் தான் திமுக.”
- திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில், தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப் பேச்சு!
தி.மு.க பவள விழா பொதுக்கூட்டம் தொடக்கம்!
தி.மு.க பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் தொடங்கியது. தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு!
இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!