Tamilnadu
நெல்லையில் ரூ.1,260 கோடியில் சோலார் மின் உற்பத்தி ஆலை : 3000 பேருக்கு வேலைவாய்ப்பு!
தமிழ்நாட்டில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற புதிய திட்டங்களை பெருமளவில் ஈர்த்திட துறை சார்ந்த கொள்கை அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்புகளை கொண்ட தமிழ்நாட்டில், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
முதலமைச்சரின் 17 நாட்கள் அமெரிக்க பயணத்தின்போது முதலமைச்சர் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூபாய் 7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பல முன்னணி நிறுவனங்கள் தாமாகவே தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க விக்ரம் மின்உற்பத்தி நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விக்ரம் மின்உற்பத்தி நிறுவனம் உள்ளது. விக்ரம் சோலார் மின்உற்பத்தி நிறுவனம் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் ஆயிரத்து 260 கோடி முதலீட்டில் சோலார் செல் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி விக்ரம் சோலார் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இந்த ஆலையில் 3 ஜிகா வாட் சோலார் செல் மற்றும் பிவி சோலார் மாடியூர் உற்பத்தி செய்ய விக்ரம் சோலார் மின்உற்பத்தி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆயிரத்து 260 கோடி ரூபாய் முதலீட்டில் 314 ஏக்கர் நிலப்பரப்பில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை மூலம் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் அடுத்த 10 ஆண்டுகளில், சோலார் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தை எளிதாக அடைய முடியும்.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!