Tamilnadu
நாமக்கல்லில் சினிமா பாணியில் சேசிங் : வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை : தமிழ்நாடு போலீசார் அதிரடி !
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே புறவழிச்சாலையில் சாலையில் வடமாநிலத்தை சேர்ந்த கண்டெய்னர் லாரி மூன்று இருசக்கர வாகனத்தையும் ஒரு காரையும் இடித்து தள்ளி நிக்காமல் சென்றதாக வெப்படை காவல் நிலையத்துக்கும், குமாரபாளையம் காவல் நிலையத்துக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதில் வட மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் இருக்கலாம் என்ற கருதி உடனடியாக திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் காவல்துறையினர் அந்த வட மாநில கண்டெய்னர் லாரியை பிடிக்க பாணியில் துரத்தி சென்றனர்.
இந்த தகவல் அப்பகுதியில் தீயாகப் பரவிய நிலையில் அதி வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை பிடிக்க பொதுமக்களும் முயன்றனர். அப்பொழுது திருச்செங்கோடு டிஎஸ்பி சென்ற வாகனம் கண்டெய்னர் லாரி முன்னர் சென்றபோது வாகனத்தின் மீது மோதி நிற்காமல் சென்றது.
எனினும் விடாத போலிஸார் மீண்டும் அவ் வாகனத்தை துரத்தி பிடித்து நிறுத்தினர். பின்னர் கண்டெய்னர் லாரியை சுற்றி ஆயுதம் தாங்கிய காவலர்கள் நிறுத்தி வைத்து கண்டன லாரியை திறந்த போது அதில் இருந்த கொள்ளையர்கள் போலிசாரை தாக்கி தப்பியோட முயற்சித்துள்ளனர்.
கொள்ளையர் தாக்குதலில் இருபோலிசாருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் போலிசார் பாதுகாப்புக்காக துப்பாக்கியால் சுட்ட நிலையில், அதில் ஒரு கொள்ளையன் உயிரிழந்தார். மேலும் ஐந்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்களை போலிஸார் கைது செய்தனர். மேலும் அந்த கண்டெய்னரில் சொகுசு கார் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த கண்டெய்னர் லாரியை மூடிவிட்டு ஊருக்கு ஒதுக்கப்புறமான இடங்களுக்கு அந்த லாரியை கண்டனரை எடுத்துச் சென்று தகுந்த பாதுகாப்புடன் அந்த திறந்து பார்த்தபோது காரில் ஏராளமான பணம் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் நேற்றிரவு கேரள மாநிலம் திருச்சூரில் மூன்று ஏ டி எம் கொள்ளையடித்து அதில் 65 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு தகவல் தெரியவந்த நிலையில், தற்போது பிடிபட்டது அந்தப் பணமாக இருக்கலாம் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!