Tamilnadu
“கடைக்கோடி மனிதனுக்கும் சிறந்த மருத்துவ சேவை என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம்” - அமைச்சர் மா.சு !
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “இன்று இரண்டாவது ஆராய்ச்சி தினமாக இது நடைபெற்றது. ஏறத்தாழ 757 உறுப்பு கல்லூரிகளை கொண்ட இந்த பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் 30 ஆயிரம் மாணவர்கள் பட்டங்களை பெற்று வெளியேறுகிறார்கள். அந்த வகையில் மிகப்பெரிய பல்கலைக்கழக நிறுவனமான இதிலிருந்து முதலமைச்சர் வழிகாட்டுதலுடன் செய்யக்கூடிய திட்டங்கள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கூட 27 உலகின் பல்வேறு சிறப்பு மருத்துவ வல்லுனர்கள் ஒன்பது வெளிநாடுகளில் இருந்து பங்கேற்க 11 ஆயிரம் சிறப்பு பிரதிநிதிகள் உடன் "எதிர்கால மருத்துவம்" என்னும் தலைப்பில் மூன்று நாட்கள் மாநாடு நடைபெற்றது. அதன் மூலம் ஏராளமான மருத்துவ வல்லுனர்கள் தங்களுடைய ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அது மட்டுமல்லாமல் தங்களுடைய சிறப்பான உரைகளினால் மருத்துவத்துறையின் எதிர்காலம், குறிப்பாக தொற்று நோய்கள் தொற்றில்லா நோய்கள் என்று உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பல விஷயங்களுக்கு தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆராய்ச்சி தினத்தை பொருத்தவரை மாணவர்கள் மருத்துவர்கள் மருத்துவ வல்லுநர்கள் என்று இளநிலை மருத்துவர்கள் முதல் நிலை மருத்துவர்கள் மருத்துவ கல்வி மாணவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பங்கேற்று ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்க பல்கலைக்கழகம் கூறியதன் விளைவாக இந்த ஆண்டு 1500 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாகவும் சிறப்பாகவும் ஆராய்ச்சிகளின் மூலம் தான் பல புதுமையான மருத்துவ அறிவியல் வளர்ச்சியை கொண்டு செல்ல முடியும். மருத்துவத்தில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லக்கூடிய "செயற்கை மருத்துவம்" என்ற தலைப்பில் இன்று பல்வேறு மாணவர்கள் தங்களுடைய படைப்புகளை தந்திருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு உலக அளவில் மருத்துவத்துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது
இதனால் மக்களின் உடல் நலனை காப்பதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு அளபரியதாக இருக்கிறது.. தமிழ்நாட்டை பொறுத்தவரை சுகாதார தேவைகளை மேம்படுத்துவதற்காக பெரும் சாத்திய போர்களை செயற்கை நுண்ணறிவு கொண்டிருக்கிறது. நோய்களை கண்டறிதல், அதிலிருந்து தனிப்பட்ட சிகிச்சை திட்டங்கள், ரோபோட் அறுவை சிகிச்சை வரை ஏற்கனவே பல முக்கிய தாக்கங்களை இந்த செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் உதவியுடன் ஏற்பட்ட நோய் காணும் சிகிச்சை திட்டமிடல், நோய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இயற்கையின் நுண்ணறிவு பெறும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி பல்வேறு வகைகளில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி இன்று உலகெங்கும் பரவி இருக்கக் கூடிய சூழலில் அது குறித்த செய்திகளை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாகவும் அது குறித்த ஆராய்ச்சிகளை படைப்பதற்கு ஏதுவாகவும் தான் இன்றைக்கு இந்த ஆராய்ச்சி தினம் நடத்தப்பட்டது. அந்த வகையில் பங்கேற்றவர்களுக்கு சிறந்த ஆராய்ச்சியாளர்களை கௌரவிக்கும் விதமாக இளம் ஆராய்ச்சியாளர் என்ற விருதும் அறிமுகப்படுத்தப்பட்டு மருத்துவமனை மற்றும் மருத்துவம் சார்ந்த மாணவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த விருதுகளோடு சேர்ந்து ஜஸ்ட் இன் மினிட் ஹேக்கத்தான் மற்றும் கட்டுரை போன்ற எழுத்துப் போட்டிகளையும் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கும் இந்த பரிசுகள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு குடிமகனும் உலக தரத்திலான மருத்துவ சேவை பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு குறிப்பாக குக்கிராமங்களிலும் தொலைதூரப் பகுதிகளிலும் இருக்கக்கூடிய கடைக்கோடி மனிதனுக்கும் சிறந்த மருத்துவ சேவை என்ற வகையில்தான் இந்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மருத்துவ ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்கனவே ஆண்டொன்றுக்கு 10 லட்சம் ரூபாய் நகராட்சிக்காக உதவி தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் 10 லட்சம் என்பதை முதன்முறையாக ஒரு கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக "பேஷன்ட் ரைட்ஸ்" நோயாளிகளின் உரிமைகள் என்கின்ற வகையில் ஆராய்ச்சி முடிவுகள் பதிவு செய்தல் மற்றும் சான்று வழங்குதல் போன்ற திட்டமும் தொடங்கப்பட்டிருக்கிறது. பருவ நிலை மாற்றங்கள் மனித குலத்திற்கு ஏற்படுத்துகின்ற விளைவுகளை எதிர் கொள்ளுதல் பற்றியும் ஆராய்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படி பல விஷயங்களுக்காக இந்த ஆராய்ச்சியை தினம் என்பது நடத்தப்பட்டிருக்கிறது.” என்றார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “பல்வேறு சட்டப் போராட்டங்களை சந்தித்ததற்கு பிறகு உச்சநீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியிருக்கிறது உண்மையில் மகிழ்ச்சி. சட்டத்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!