Tamilnadu
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : போலீசாரை தாக்கி தப்ப முயன்ற பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை !
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலைச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், ஆற்காடு சுரேஷ், மார்க்கெட் ரவி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சீசிங் ராஜாவும் இதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
சீசிங் ராஜாவுசென்னையில் பிரபலமான கூலிப்படை தலைவனாக செயல்பட்டவர். சென்னை மட்டுமின்றி ஆந்திராவிலும் சீசிங் ராஜா மீது கொலை வழக்குகள் உள்ளன. இதற்காக பல முறை சிறை சென்றுள்ளார். 7 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல ரௌடிகள் சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில், சீசிங் ராஜாவையும் போலீசார் குறி வைத்தனர். சீசிங் ராஜா தலைமறைவான நிலையில், சீசிங் ராஜாவின் கூட்டாளியான சஜித் தனிப்படை போலீசாரால் சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சீசிங் ராஜா புகைப்படத்துடன் போஸ்டர் தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டது.
இந்நிலையில், போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி சீசிங் ராஜா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதியில் ரவுடி சீசன் ராஜா போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திர மாநிலம் கடப்பாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்து, தொடர்ந்து நீலாங்கரை அக்கரை அருகே பக்கிங்காம் கால்வாய் அருகே பதுக்கி வைத்து இருந்த ஆயுதங்களை கைப்பற்ற அவரை அங்கு அழைத்து சென்றனர். அப்போது ரவுடி சீசிங் ராஜா தான் மறைத்து வைத்து இருந்த கள்ளதுப்பாக்கியால் போலீசை சுட்டுள்ளதாகவும், மதுரை தொடர்ந்து போலீசார் வாகனத்தை நோக்கி இரண்டு முறை சுட்டதாகவும், தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் விமல் இரண்டு முறை சுட்டதில் மார்பு மற்றும் மேல் வயிறு ஆகிய பகுதிகளில் தோட்டா பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் போலிசார் கூறப்படுகிறது.
தற்பொழுது என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சிசிங் ராஜாவின் உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பின கூறாய்விற்காக கொண்டு செல்லப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ச்சியாக மூன்றாவது என்கவுண்டர் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!