Tamilnadu
Super Hero ஆன நெல்லை மாணவன்... பாட்டு பாடி பாராட்டிய போலீஸ்... நெகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ் !
நெல்லை திருமால் நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சரவண குரு. இவர் பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவிபெரும் தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழலில் மாணவன் சரவணகுரு வழக்கம்போல் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
அப்போது புதிய பேருந்து நிலையத்தில் கீழே பர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்து பாரத்தபோது அதில் ரூ.7000 பணம் இருந்துள்ளது தெரியவந்தது. இதனை கண்ட அந்த மாணவன் அதனை எடுத்து அருகில் இருந்து பெருமாள் புறம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பத்திரமாக ஒப்படைத்துள்ளார். மாணவனின் செயலை அறிந்த காவல் உதவி ஆணையாளர் மாணவனை அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டுகள் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து காவல் நிலையத்தில் இருந்து ஆய்வாளர் ஹரிகரன், பள்ளி மாணவன் சரவணகுருவை நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் நடித்த படிக்காதவன் திரைப்படத்தில் இருந்து ‘ஒரு கூட்டு கிளியாக..’ என்ற பாடலில் வரும் “செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்...” என்ற பத்தியை பாடி பாராட்டு தெரிவித்தார். காவல் ஆய்வாளர் மாணவனை பாட்டு பாடி பாராட்டு தெரிவிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ், “பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் சரவணகுரு. பேருந்து பயணத்தில் பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.7 ஆயிரத்தையும், பணப்பையையும் அருகில் உள்ள பெருமாள்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து Super Hero ஆகி உள்ளார். இனிமையான பாடல் மூலம் மாணவனை பாராட்டிய காவல் ஆய்வாளர் ஹரிஹரன் அவர்களுக்கும், மாணவருக்கும் நன்றிகள். வாழ்த்துகள்.” என்று குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.1,000 கோடி முதலீடு; 15,000 பேருக்கு வேலை: அரியலூரில் DeanShoes நிறுவனம் -அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
7 மாதங்களுக்கு பிறகு... 1 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி: பரபரப்பான டெல்லி மேயர் தேர்தல் !
-
டெல்லியில் போதைப் பொருட்களுக்கு எதிராக அதிரடி சோதனை! : 24 மணிநேரத்தில் 700 பேர் கைது!
-
கஸ்தூரியை கைது செய்ய காவல்துறை தீவிரம்! : பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து நடவடிக்கை!
-
“அ.தி.மு.க. ஆட்சியே அரசு ஊழியர்களை வேட்டையாடிய ஆட்சிதான்” : முரசொலி தலையங்கம்!