Tamilnadu
Instagram-ல் ஆபாசமாக பாடல் பாடி வீடியோ வெளியிட்ட கானா கௌதம்... தட்டி தூக்கிய திருச்சி போலீஸ் !
திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் பெண் காவலர் பிரீத்தி என்பவர் தினந்தோறும் சமூக வலைதளத்தை கண்காணித்து அதில் வரும் ஆபாசமான மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பணி செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (18.09.2024) Instagram வலைதளத்தை கண்காணித்து வந்தபோது ‘gana_gowtham_puchi_katra_thali’ என்ற instagram ID-யை பயன்படுத்தி வரும் பெயர் தெரியாத நபர் பெண்கள் அணியும் உள்ளாடைகளை போட்டுக் கொண்டு திரைப்பட பாடலை திருத்தி பாலியல் சம்பந்தமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும், ஆபாசமாகவும் அறுவருக்கதக்க வார்த்தைகளை பயன்படுத்தியும் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார்.
இவர் பதிவிடும் பதிவுகள் அனைத்தும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், அந்த வீடியோவை பார்க்கும் நபர்களின் பாலியல் உணர்ச்சிகளை தூண்டும் வகையிலும் இருப்பதோடு, இவர் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்கள் மூலம் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பரப்புவதால் அதனை பார்க்கும் நபர்கள், பெண்களை பாலியல் ரீதியாகவும். உடல் ரீதியாகவும் கேலி கிண்டலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
இதனால் மேற்குறிப்பிட்ட Instagram ID-யை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்தியும், பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் உடல்ரீதியாகவும். அநாகரிகமாக அறுவருக்கதக்க வகையிலும் வீடியோக்கள் வெளியிட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி மேற்படி பெண் காவலர் பிரீத்தி என்பவர் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் 75(1) (iv), 79, 296 BNS r/w 4 of TNPWH Act and 67 IT Act and 4 and 6 Indecent Representation of Women Act-ன்படி அந்த ID-யை பயன்படுத்தி வந்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில், வேலூர், கொத்தமாடிகுப்பம், மேல்பட்டி பகுதியைச் சேர்ந்த கௌதம் என்பவரை கைது செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட கௌதம் திருச்சி பெட்டவாய்த்தலை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் குற்றவாளியின் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு பயன்படுத்திய அவரது Instagram ID யினை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!