Tamilnadu
”ஒரே நாடு ஒரே தேர்தல் பா.ஜ.க-வின் ஈகோ” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு!
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்ற கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருவதால் இந்த திட்டத்தை அவர்களால் இன்னும் நடைமுறை படுத்த முடியவில்லை.
கடந்த ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு, ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவிற்கு காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதங்களை அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தனது ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசிடம் வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த ஆய்வு குழுவின் அறிக்கைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், பா.ஜ.கவின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார். இந்த தேர்தல் முறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
தற்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் முறை சாத்தியமற்றது என மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமற்றது. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. இந்த முன்மொழிவு பா.ஜ.கவின் ஈகோவை திருப்திப்படுத்தும் நடவடிக்கையாகும். ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப இந்தியாவின் ஜனநாயகத்தை வளைக்க முடியாது.
இந்த திசைதிருப்பல் தந்திரங்களில் சக்தியை வீணாக்காமல், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் மாநிலங்களுக்கு வளங்களை சமமாக வழங்குதல் போன்ற அழுத்தமான பிரச்சினைகளை ஒன்றிய அரசு தீர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை மையத்தின் எச்சரிக்கை என்ன?
-
'திராவிட மாடல்’ ஆட்சிக்கு நிதி ஆயோக் பாராட்டு : மாநில உரிமைகளுக்கான உரிமைக் குரல் ! - கி.வீரமணி !
-
LIC விவகாரம்: “இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக போராடும் நிலை வரும்” - வைகோ எச்சரிக்கை!
-
"இந்தி மொழி கொடுங்கோன்மையை ஒன்றிய அரசு உடனே நிறுத்தவேண்டும்" - முதலமைச்சர் கண்டனம் !
-
சென்னையில் பன்னாட்டு புத்தகத் திருவிழா! : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு!