Tamilnadu
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது பாய்ந்த ஊழல் வழக்கு - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி !
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது அன்றைய உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.26.61 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
மேலும் மழைநீர் வடிகால், சாலைப் பணிகளுக்கான டெண்டர்களை முறைகேடாக முடிவு செய்ததன் மூலம், அன்றைய நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், தனக்கு வேண்டியவர்களுக்கு முறைகேடாக எஸ்.பி.வேலுமணி டெண்டர் ஒதுக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் புகாரின் அடிப்படையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, சென்னை மாநகராட்சியின் முன்னாள் தலைமை பொறியாளர் நந்தகுமார் உள்ளிட்ட 10 பொறியாளர்கள் என மொத்தம் 11 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ளது. வழக்கின் அடிப்படையில் விரைவில் விசாரணை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!