Tamilnadu

பிரம்மாண்டமாக தொடங்கிய திமுக பவளவிழா மற்றும் முப்பெரும் விழா: சென்னையில் அலைகடலென திரண்ட உடன்பிறப்புகள்!

முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளால் 1985 - ஆம் ஆண்டு முதல் தி.மு.கவில் “முப்­பெ­ரும் விழா’’ அறி­விக்­கப்­பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தை பெரி­யார் பிறந்த நாள் செப்:17, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் செப்:15, பிறந்த நாளையும், தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட 17. 9. 1949 தினத்தையும் இணைத்து “முப்­பெ­ரும் விழா’’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முப்பெரும் விழாவுடன் சேர்த்து, தி.மு.க தோன்றி 75 ஆண்டு­ பவ­ள­விழாவும் சேர்த்து கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் தி.மு.க பவளவிழா மற்றும் முப்பெரும் விழா மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார்.

முன்னதாக AI மூலம் முத்தமிழறிஞர் கலைஞர் தி.மு.க முப்பெரும் விழாவை வாழ்த்தி பேசினார். பவளவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பேசினார். இதனைத் தொடர்ந்து மேலும் இந்த பிரம்மாண்ட விழாவில், பாப்பம்மாள் சார்பாக அவரது பேத்தி ஜெயசுதா அவர்களிடம் பெரியார் விருதினையும்,

அறந்தாங்கி மிசா இராமநாதன் அவர்களுக்கு அண்ணா விருதினையும், வழங்கினார் முதலமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு கலைஞர் விருதினையும், கவிஞர் தமிழ்தாசன் அவர்களுக்கு பாவேந்தர் விருதினையும், வி.பி.ராஜன் அவர்களுக்கு பேராசிரியர் விருதினையும் தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விருதினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் மத்தியில் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

Also Read: போராட்டம்... போராட்டம்... தி.மு.க. வளர்ந்து வருகிறது என்பதை முதலில் சொன்னது சிறைகள்தான் - முரசொலி !