Tamilnadu

பெரியார் முதல் மு.க.ஸ்டாலின் விருது வரை... கழக முப்பெரும் விழாவில் 6 உடன்பிறப்புகளுக்கு விருதுகள்!

திராவிட முன்னேற்றக் கழகம் 1949, செப்.17-ம் தேதி பேரறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்டது. கழகத்தின் சித்தாந்தத்தை அண்ணாவின் உடன்பிறப்புகளான கலைஞர் உள்ளிட்ட மூத்தத் தலைவர்கள் மக்களிடையே கொண்டு சேர்த்தனர். அதன்பிறகு கலைஞர் தலைமையிலான நவீன திமுக உருவானது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக திராவிட மாடல் அரசு நாட்டுக்கே முன்மாதிரியாக அமைந்துள்ளது.

முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளால் 1985-ம் ஆண்டு முதல் தி.மு.கவில் ‘முப்­பெ­ரும் விழா’ அறி­விக்­கப்­பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தை பெரி­யார் பிறந்த நாள் (செப்.17), பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15), தி.மு.க தோற்றுவிக்கப்பட்ட நாள் (செப்.17) என மூன்றையும் இணைத்து ஆண்டுதோறும் கழக உடன்பிறப்புகளால் ‘முப்­பெ­ரும் விழா’ கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு முப்பெரும் விழாவுடன் சேர்த்து, தி.மு.க தோன்றி 75 ஆண்டு­ பவ­ள­விழாவும் சேர்த்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் முப்பெரும் விழா, சென்னை நந்தனம் YMCA திடலில் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான உடன்பிறப்புகள் கலந்துகொண்ட இந்த விழாவில் AI தொழில்நுட்பம் மூலம் முத்தமிழறிஞர் கலைஞர் தி.மு.க முப்பெரும் விழாவையும், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் வாழ்த்தி பேசினார்.

இதைத்தொடர்ந்து சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து தலைவர்கள் பெயரிலான விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதில்,

=> பெரியார் விருது :

பாப்பம்மாளுக்கு வழங்கப்பட்ட நிலையில், அவர் சார்பாக அவரது பேத்தி ஜெயசுதா பெற்றுக்கொண்டார். ஜெயசுதாவிடம் கேடயம், ரூ.2 லட்சத்திற்கான பொற்கிழி வழங்கப்பட்டது.

=> அண்ணா விருது :

அறந்தாங்கி மிசா இராமநாதன் அவர்களுக்கு அண்ணா விருது, கேடயம், ரூ.2 லட்சத்திற்கான பொற்கிழி வழங்கப்பட்டது.

=> கலைஞர் விருது :

எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு கலைஞர் விருது, கேடயம், ரூ.2 லட்சத்திற்கான பொற்கிழி வழங்கப்பட்டது.

=> பாவேந்தர் விருது :

கவிஞர் தமிழ்தாசன் அவர்களுக்கு பாவேந்தர் விருது, கேடயம், ரூ.2 லட்சத்திற்கான பொற்கிழி வழங்கப்பட்டது.

=> பேராசிரியர் விருது :

வி.பி.ராஜன் அவர்களுக்கு பேராசிரியர் விருது, கேடயம், ரூ.2 லட்சத்திற்கான பொற்கிழி வழங்கப்பட்டது.

=> மு.க.ஸ்டாலின் விருது :

தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் விருது, கேடயம், ரூ.2 லட்சத்திற்கான பொற்கிழி வழங்கப்பட்டது.

- இந்த விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் இதுவரை இல்லாமல், ‘மு.க.ஸ்டாலின் விருது’ முதல்முறையாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”ஓங்குக திராவிட மாடல் ஆட்சி” : AI மூலம் தி.மு.க முப்பெரும் விழாவை வாழ்த்திய முத்தமிழறிஞர் கலைஞர்!