Tamilnadu
"NEP-ஐ நடைமுறைப்படுத்தினால், பள்ளிகளில் இடைநிற்றல் அதிகரிக்கும்!" : உயர்கல்வி அமைச்சர் பொன்முடி விளக்கம்!
உயர்கல்வித்துறை சார்பில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் நாள் தொடங்கப்பட்டு, மாநில அளவில் பாரதி இளம் கவிஞர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக அண்மையில் நடந்த கவிதை போட்டியில் சிறப்பாக எழுதி வெற்றி பெற்ற இருவருக்கு பாரதி இளம் கவிஞர் விருது மற்றும் பரிசுத்தொகை ஒரு லட்ச ரூபாய் வழங்கினார் அமைச்சர் பொன்முடி.
இந்நிகழ்வின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, கல்லூரி சேர்க்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். அதன் பிறகு, செய்தியாளர்கள் கல்வியில் ஒன்றிய அரசு காண்பிக்கும் பாரபட்சம் குறித்து கேட்ட கேள்விக்கு,
“ஒன்றிய அரசு கொடுக்க வேண்டிய நிதி அதிகம் உள்ளது என்று சொல்லிக் கொண்டு தான் உள்ளோம். பள்ளி கல்வித்துறைக்கு பிஎம் ஶ்ரீ நிதி கூட தரவில்லை. புதிய கல்விக் கொள்கையில் உள்ள பல திட்டங்களை நாங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தி விட்டோம்.
ஒன்றிய அரசு சொல்லும் புதிய கல்விக் கொள்கையில் சில திட்டங்கள் நடைமுறை படுத்தவே முடியாத அளவுக்கு உள்ளது. 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொது தேர்வு என்று சொல்கிறார்கள் அது சரியாக வருமா? ஆரம்ப காலத்தில் இஎஸ்எல்சி இருந்தது அதனால்தான் பலர் 8 ஆம் வகுப்பை தாண்டவில்லை. அதை மாற்றி தான் SSLC கொண்டு வந்தனர். 10+2+3 தான் நம் கல்வி முறை.
அவர்கள் சொல்வது போல் செய்தால் இடைநிற்றல் அதிகரிக்கும். எல்லா மாணவர்களும் உயர்கல்வி படிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் அந்த வாய்ப்பு இதுபோன்ற சூழல்களால் மறுக்கப்படுகிறது.
இரு மொழிக் கொள்கை என்பது அண்ணா காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சரின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுதே புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு செய்ய குழுவை அமைத்திருந்தார் அதில் நானும் இருந்தேன்.
புதிய கல்விக் கொள்கையில் மாற்ற வேண்டியவற்றை நாங்கள் அப்போதே சொல்லி உள்ளோம். புதிய கல்விக் கொள்கையில் உள்ள மதிய உணவு திட்டங்கள் எல்லாம் காமராஜர் காலத்தில் இருந்து செயல்பட்டு வரும் திட்டங்கள்.
ஆங்கிலத்திலும், படிக்க வேண்டும், தமிழ் வழியிலும் படிக்க வேண்டும் என்று பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழியில் கல்வி கொண்டு வந்தார் கலைஞர். இப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லா பாடங்களையும் தமிழ் மொழியில் கற்பிக்க வேண்டும் என்று கொண்டுவந்துள்ளார். அது மட்டுமில்லாமல் அவர்களுக்கு புத்தங்கள் தமிழ் வழியில் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டு மொழிகள் இருந்தால் போதும்.
பிரசிடென்சி கல்லூரியில் இந்த ஆண்டு B.A. Hindi படிப்புக்கு 4 பேர் தான் சேர்ந்துள்ளனர். 4 ஆயிரம் பேருக்கு மேல் படிக்கும் கல்லூரியில் 50 பேர் வரை கூட படிக்கவில்லை. நந்தனம் கல்லூரியில் கூட ஹிந்தி பட்டப்படிப்பு உள்ளது அதிலும் பெரிதளவில் மாணவர்கள் இல்லை அதனால் ஏதேனும் ஒரு இடத்தில் மட்டும் இந்த படிப்பை வைக்கலாமா என்று ஆய்வு செய்து வருகிறோம். B A உருது படிப்பில் மாணவர்கள் ஒருவர் கூட சேரவில்லை. அதே போல் மலையாளத்தில் 3 முதல் 4 பேர் படிக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்து ஒரு Option ஆக படிப்பது என்றால் படிக்கட்டும், ஆனால் கட்டாயம் படித்தாக வேண்டும் என்று சொன்னால் அது தமிழ்நாட்டில் நடக்குமா?.
ஆங்கிலம் சர்வதேச மொழி அது எல்லாரும் படிக்க வேண்டியது கட்டாயம். தமிழ் நாட்டில் இருக்கும் மாணவர்கள் தமிழ் கட்டாயம், வெளிநாட்டில் இருந்து பணிக்கு வந்தவர்கள் கூட தமிழ் நன்றாக பேசுகிறார்கள். கட்டாயப்படுதினால் மாணவர்களுக்கு அது பெரும் சுமையாகிவிடும்.
B.A, B.Sc சேர்வதற்கு கூட நுழைவு தேர்வு கொண்டு வர வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் சொல்கிறார்கள். பொறியியல் படிப்பில் சேர முன்பு நுழைவு தேர்வு இருந்தது அதை எடுத்தவரே கலைஞர் தான். எம் பி பி எஸ் படிப்பில் சேர நீட் தேர்வு எழுத வேண்டும் என்று 12ஆம் வகுப்பிலேயே கோச்சிங் சென்டரில் சேர்கிறார்கள் அதனால் 12-ம் வகுப்பு பாடத்தில் கவனம் குறைகிறது இதனால் தான் வேண்டாம் என்கிறோம்.
கல்வியின் தரமும், எண்ணிக்கையும் உயர்த்த வேண்டும் என்பது தான் நோக்கம்” என்றார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்