Tamilnadu
19 நிறுவனங்கள் : ரூ.7616 கோடிக்கு முதலீடு - தொழில் முதலீடுகளின் Number 1 CM : ஒப்பந்தங்களின் விவரம் இதோ!
தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குவதோடு, அதிக தொழிற்சாலைகளுடன் இந்திய அளவில் முன்னணி மாநிலமாகவும் விளங்குகிறது.
தமிழ்நாட்டில் அதிகளவிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், உலக தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற புதிய திட்டங்களை பெருமளவில் ஈர்த்திட துறை சார்ந்த கொள்கை அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்புகளை கொண்ட தமிழ்நாட்டில், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி அவர் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்.27 ஆம் தேதி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அங்கு 25 முன்னணி நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் 19 நிறுவனங்களுடன் ரூ.7616 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 11,516 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
1.நோக்கியா (Nokia) - ரூ.450 கோடி முதலீடு - 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
2.பேபால் (PayPal) - 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
3.ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனம் (Yield Engineering Systems) - ரூ.150 கோடி முதலீடு - 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
4,மைக்ரோசிப் (Microchip Technology Inc.) - ரூ.250 கோடி முதலீடு - 1500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
5.ஓமியம் (Ohmium) - ரூ.400 கோடி முதலீடு - 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
6.இன்பிங்ஸ் ஹெல்த்கேர் (Infinx Healthcare) - ரூ.50 கோடி முதலீடு - 700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
7.அப்ளைடு மெட்டீரியல்ஸ் (Applied Materials) - 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
8.ட்ரில்லியன்ட் நெட்வர்க்ஸ் நிறுவனம் (Trilliant Networks, Inc) - ரூ.2000 கோடி முதலீடு
9.ஈட்டன் கார்ப்பரேஷன் (Eaton Corporation) நிறுவனம் - ரூ.200 கோடி முதலீடு - 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
10.லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனம் (Lincoln Electric) - ரூ. 500 கோடி முதலீடு!
11.விஷய் பிரிஷிஷன் நிறுவனம் (Vishay Precision) - ரூ.100 கோடி முதலீடு!
12.விஸ்டியன் நிறுவனம் (Visteon) - ரூ.250 கோடி முதலீடு!
13.ஜாபில் நிறுவனம் (Jabil Inc.) - ரூ.2000 கோடி முதலீடு!
14.ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் (Rockwell Automation) - ரூ.666 கோடி முதலீடு!
15.ஆட்டோடெஸ்க் நிறுவனம் (Autodesk) - தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த ஒப்பந்தம்.
16.கேட்டர்பில்லர் நிறுவனம் (Caterpillar Inc.,) - ரூ.500 கோடி முதலீடு!
17.Rapid Global Business Solutions, Inc. (RGBSI) நிறுவனம் - ரூ.100 கோடி முதலீடு!
18.அஷ்யூரன்ட் (Assurant )நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் நிறுவுவதற்கான ஒப்பந்தம்!
19.தமிழ்நாட்டில் கூகுள் (Google) நிறுவனத்துடன் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்!
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு!
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு ஆப்பிள்(Apple), கூகுள் (Google), மைக்ரோசாப்ட் (Microsoft), நைக்கி(Nike) மற்றும் ஆப்டம் (Optum), நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு !
.ஃபோர்டு மோட்டார் நிறுவனம் (Ford Motor) மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பு (ITServe Alliance) கூட்டமைப்பின் உயர் அலுவலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!