Tamilnadu
பொங்கல் விழா - ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்! : முந்திக்கொண்டு பதிவு செய்த மக்கள்!
பொங்கல் விழா கொண்டாட்டம் வருகின்ற ஜனவரி 13ஆம் நாள் தொடங்குகிறது. வருகின்ற ஜனவரி 13ஆம் நாள் போகி, வருகின்ற 14ஆம் நாள் பொங்கல் பண்டிகை, வருகின்ற 15ஆம் நாள் மாட்டுப் பொங்கல், வருகின்ற 16ஆம் நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இதற்கான ரயிலில் பயணம் செய்ய 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
ஜனவரி 10 ஆம் நாள் பயணம் செய்வதற்கு இன்று முன்பதிவு செய்யலாம். அதேபோல, ஜனவரி 11 ஆம் நாள் பயணம் செய்ய வரும் 13 ஆம் நாளும், ஜனவரி 12 ஆம் நாள் பயணத்துக்கு வரும் 14ஆம் நாளும், ஜனவரி 13 ஆம் நாள் போகி அன்று பயணம் செய்ய வரும் 15 ஆம் நாளும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக 2025 ஆம் ஆண்டு பெங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொங்கியது. ஜனவரி 10 ஆம் நாள் பயணம் மேற்கொள்வதற்கான பயண டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. IRCTC செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு மையங்களில் தற்போது டிக்கெட் விற்பனை தொடங்கி உள்ளது. ரயில்வே டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டது.
ஆன்லைன் வாயிலாக பெரும்பாலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதால் நேரில் முன்பதிவு செய்ய வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர். காலை 6 மணி முதலாக பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு முன்பதிவு செய்ய காத்திருந்த நிலையில் சில நிமிடங்களிலேயே டிக்கெட் முழுவதும் நிறைவு பெற்றதால் நேரில் வந்த ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்று வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் உள்ள டிக்கெட் முன்பதிவு செய்யும் அலுவலகத்தில் கணினி கோளாறு ஏற்பட்ட காரணத்தினால் காலை 6 மணி முதலாக காத்திருந்த பொது மக்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.
பெரும்பாலான டிக்கெட்டுகள் ஆன்லைன் வாயிலாகவே பதிவு செய்யப்பட்டதால் நேரில் வருகை தந்தவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. முன்பதிவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து தரும்படியும் கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்காக கூடுதல் டிக்கெட் கவுண்டர்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மிகுந்த வருத்தத்துடன் வேதனையுடனும் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!