Tamilnadu
”தமிழ்நாட்டில் எப்போதும் இரு மொழிக் கொள்கைதான்” : அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்!
இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடுதான் சிறந்து விளங்குகிறது. 53% பேர் உயர்கல்விக்குச் செல்கிறார்கள் என அமைச்சர் பொன்முடி பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ”இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு சிறப்பாக விளங்கி வருகிறது. 53% பேர் உயர்கல்விக்கு செல்கிறார்கள்.
இருமொழிக் கொள்கையால்தான் தமிழ்நாடு உலகளவில் சிறப்பான மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் எப்போதும் இரு மொழி கொள்கைதான் கடைபிடிக்கப்படும்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கா நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற சிறப்பான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களால் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!