Tamilnadu
திருநெல்வேலியில் அமைய உள்ள தேசிய பேரிடர் குழுவின் மண்டல மையம்! : 32 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை!
திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரத்தில், தேசிய பேரிடர் குழுவின் மண்டல மையம் அமைய உள்ளதைத் தொடர்ந்து தேசிய பேரிடர் பாதுகாப்பிற்காக 32 பேர் அடங்கிய குழுவினர், அதிக நவீன உபகரணங்களுடன் ராதாபுரம் வந்தடைந்தனர்.
இந்நிலையில், தேசிய பேரிடர் குழுவின் மண்டல அலுவலகம், தற்காலிகமாக முறைப்படி இன்னும் இரண்டு நாட்களில் ராதாபுரத்தில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தில் பேரிடர் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தேசிய பேரிடர் மண்டல மையம் செயல்பட உள்ளது.
இந்தியாவில் 18 இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கீழ் தேசிய பேரிடர் மையங்கள் இயங்கி வருகின்றன. இதன் ஒரு அங்கமாக தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் ஏற்கனவே தேசிய பேரிடர் மண்டல மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் வழி, கேரளா ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் பேரிடர் சமயங்களில் அரக்கோணத்திலிருந்து மீட்புக் குழுவினர் அங்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மண்டலத்தின் கீழ் கேரள மாநிலம் திருச்சூரிலும், அந்தமான் நிக்கோபார் தீவிலும், சென்னையிலும் தேசிய பேரிடர் மீட்பு படையின் மண்டல மையங்கள் செயல்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக தற்பொழுது நான்காவது இடமாக நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒரு பிரிவு அமையப்பட உள்ளது. 32 பேர் கொண்ட இந்த தேசிய பேரிடர் குழு மண்டல மையம் 24 மணிநேரமும் செயல்படும்.
அதி நவீன மீட்பு உபகரணங்கள், தொலைதொடர்பு சாதனங்கள், இரசாயனம், கதிரியக்கம் மற்றும் உயிரியல் சார்ந்த பேரிடர்களை எதிர் கொள்ளும் வகையில் உபகரணங்களும் மண்டல மையத்தில் இடம்பெறுகிறது.
தற்காலிகமாக அமைய இருக்கும் மண்டலம், நிரந்தரமாக அமைவதற்கு நெல்லை மாவட்டம் வள்ளியூர் மற்றும் ராதாபுரம் பகுதிகளில் 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!