Tamilnadu

பாரதியாரின் நினைவு நாள் : ‘மகாகவி’ நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை!

மகாகவி பாரதியாரின் நினைவு நாளை ஒட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மகா­கவி பார­தி­யார் கடந்த 11.12.1882 ஆம் ஆண்டு தூத்­துக்­குடி மாவட்­டம் எட்­ட­ய­பு­ரத்­தில் சின்னச்­சாமி - இலட்­சுமி அம்­மாள் தம்­ப­தி­ய­ருக்கு மக­னா­கப் பிறந்­தார். இவரது கவிப்புலமையைப் பாராட்டி எட்டையபுர மன்னர், இவருக்கு பாரதி என்று பட்டம் வழங்கினார். நவீன தமிழ் கவிஞர்களின் முன்னோடியாகவும், தமிழ் மொழ்ஹியில் சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்த இவர், மகாகவி எனும் புனைப்பெயர் கொண்டு அழைக்கப்பெற்றார்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் இவரது பங்கும் முக்கியமானவையாக திகழ்ந்தது. பேர­றி­ஞர் அண்ணா அவட்களால், மக்கள் கவி என்று அழைக்கப்பட்டார் பாரதியார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில் எட்டையபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் நாட்டுடைமையாக்கி நினைவில்லமாக மாற்றினார்.

மேலும் கடந்த 12.5.1973 அன்று நடைபெற்ற விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் திறந்து வைத்தார். இந்த சூழலில் கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில், செப்.11-ம் தேதி அன்று ‘மகாகவி’ நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆண்டுதோறும், செப்.11 ‘மகாகவி நாளாக’ தமிழ்நாடு அரசால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பாரதியாரின் திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள், பலரும் மலர்மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துவர். அந்த வகையில் இந்த ஆண்டும் அமைச்சர்கள் சேகர்பாபு, பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் சென்னை காமராஜர் சாலையில் அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

Also Read: இலங்கை கடற்படை கப்பல் மோதி நாகை மீனவர்கள் படகு மூழ்கி விபத்து : மீனவர்கள் குமுறல் !