Tamilnadu
இந்தியாவிலேயே Ph.D மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முன்னிலை : கடைசி இடத்தில் பா.ஜ.க மாநிலங்கள்!
முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் மாணவர்களில் நலனில் அதிக அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு முன்னெடுத்து வருகிறது. நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முத்தான திட்டங்களால் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.
இந்த நிலையில் நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் பி.எச்.டி படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 28 ஆயிரத்து 867 மாணவர்கள் பி.எச்.டி படிப்பில் சேர்ந்துள்ளனர்.
அதே நேரத்தில் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தரப்பிரதேசம்,மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பி.எச்.டி படிப்பில் குறைவான எண்ணிக்கையிலேயே சேர்க்கை நடைபெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 21 ஆயிரத்து 713 மாணவர்களும், மகாராஷ்டிராவில் 17 ஆயிரத்து 832 மாணவர்களும், ராஜஸ்தானில் 13 ஆயிரத்து 828 மாணவர்களும் பி.எச்.டி படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் கல்விதான் சிறந்தது என்பதை இதுதான் உதாரணம். இப்படி தமிழ்நாட்டின் கல்வி சிறப்பாக இருக்கும்போதுதான், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு கல்வியை குறை சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கூட்டாட்சி தத்துவத்தை உறுதிசெய்யும் இந்திய அரசியலமைப்பு : முரசொலி தலையங்கம்!
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!