Tamilnadu
”பிற்போக்கு கருத்துக்கு எதிராக துணிச்சலுடன் நின்ற ஆசிரியர்” : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டு!
சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்’கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப் பெரிய ஆயுதம்’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்துறை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,” பெண் குழந்தைகள் படிக்க வேண்டும், சுயமரியாதையுடன் இருக்க வேண்டும், தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என முதன் முதலில் கூறியவர் தந்தை பெரியார்தான்.
அறிவை பகுத்தறிவாக உணர வேண்டிய இடம் பள்ளிக்கூடம் தான். அதனால்தான் தன்னுடை இரு கண்களையும் பறிகொடுத்து இருந்தாலும் அவருக்கு கண்ணாக இருப்பது கல்விதான். அதனால்தான் பிற்போக்கு கருத்து சொல்பவருக்கு எதிராக துணிச்சலுடன் எழுந்து நின்று ’நீ சொல்லும் கருத்து தவறு’ என்று தமிழ் ஆசிரியர் சங்கரால் சொல்ல முடிந்தது.
நம்முடைய பிள்ளைகள் இந்த இடத்திற்கு வந்த பின்பு அவர்கள் நம் பிள்ளைகள், பள்ளி வளாகம் இது என்னுடைய சொத்து, யார் வரவேண்டும், வரக்கூடாது, எப்படிப்பட்ட அறிவு சார்ந்தவரை அழைக்க வேண்டும் என்பதை ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும்.
மாணவர்கள் பகுத்தறிந்து பார்க்க வேண்டும் யார் என கருத்து சொன்னாலும் அது சரியா தவறா என்பதை உணர வேண்டும். ஏன் என்ற கேள்வி கேட்க வேண்டும். பெண்கள் பகுத்தறிவோடு சிந்தித்து ஒவ்வொரு முடிவையும் எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பா?... பழனிசாமிக்கு தக்க பதிலடி கொடுத்த அமைச்சர் ஆர்.காந்தி !
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !