Tamilnadu
”மாணவர்களை சிந்திக்க தூண்டும் கல்விமுறை தமிழ்நாட்டின் கல்விமுறை” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கும் விழா வண்டலூரில் உள்ள பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசன்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”பள்ளிக்கல்வித்துறை சார்பில் கிட்டத்தட்ட 385 ஆசிரியர்களுக்கு விருதுகள் இன்றைக்கு வழங்கப்படுகின்றன. உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
ஆசிரியர் பணி என்பது மற்ற பணிகளை போல கிடையாது. இந்த பணி ஒரு அறிவார்ந்த தலைமுறையை உருவாக்குகின்ற அறப்பணி.
அறிவாற்றல் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு கல்வி மிக மிக முக்கியம். கல்வியை கொடுக்கின்ற பணியை தான் ஆசிரியர்கள் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு வகையில் திராவிட இயக்க தலைவர்கள் எல்லோருமே ஆசிரியர்கள் தான்.
மானமும் அறிவும் தமிழ் சமூகத்துக்கு ஊட்டியவர் தந்தை பெரியார். எனவே தான் அவரை அறிவாசான் என்று புகழ்கின்றோம். அறிவோடு சேர்த்து மானத்தையும் சொல்லித் தந்தவர் தந்தை பெரியார் அவர்கள் மட்டும்தான். தந்தை பெரியார் பகுத்தறிவு கருத்துக்களை மக்களுக்கு புரிகின்ற மொழியில் மாலை நேர பொதுக் கூட்டங்களை நடத்தினார். அதன் காரணமாகவே தமிழ்நாட்டின் முதல் மாலை நேர கல்லூரிகள் அந்த பொதுக் கூட்டங்கள் என பேரறிஞர் அண்ணா கூறினார்.
அண்ணா அவர்கள் தன்னுடைய திராவிட நாடு பத்திரிக்கையில் உலக வரலாற்று புரட்சிகள் மாவீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை தன்னுடைய தொண்டர்களுக்கு ஒரு ஆசிரியரை போல அறிஞர் அண்ணா சொல்லிக் கொடுத்தார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் எழுதாத எழுத்து இல்லை, பேசாத மேடைகள் இல்லை. கலைஞர் அவர்கள் முதல் பணியை ஆசிரியர் பணி தான். மாணவ நேசன், முரசொலி போன்ற இதழ்களுக்கு கலைஞர் அவர்கள் ஆசிரியராக தான் தன்னுடைய பொது வாழ்க்கையை தொடங்கினார்.
ஒரு மாணவன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆசிரியர் இடத்திலிருந்து யோசித்து திட்டங்களை தந்து கொண்டிருப்பவர் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். காலை சிற்றுண்டி திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியது, பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் கொண்டு வந்தது, இதேபோல் தமிழ் புதல்வன் திட்ட மூலம் அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி சேர்ந்துள்ள மூன்று லட்சத்தை 73 ஆயிரம் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருவது இன்று பல திட்டங்களை கொண்டு வந்தார்.
படிக்கும் மாணவர்கள் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் நம்முடைய முதலமைச்சர் நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டுவதோடு வேலை செல்வதற்கும் தேவையான அறிவாற்றலை கற்றுக் கொடுக்கிறது. 30 லட்ச்சமானவர்கள் நான் முதல்வன் திட்டத்தால் பயனடைந்து உள்ளனர். இன்று அரசு பள்ளியில் பிடித்த மாணவர்கள் நூற்றுக்கணக்கான ஐஐடி என்ஐடி மாதிரியான உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்து படிக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தனி வரலாறு உண்டு. நீதி கட்சி காலத்தில் தொடங்கி திராவிட மாநகராட்சி வரை நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு அது. ஆனால் நம்முடைய அரசின் பாடத்திட்டத்தை பற்றி ஒருத்தர் குறை சொல்லி பேசி இருக்கிறார். அவருக்கு நம்முடைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் பதில் கூறியுள்ளார். எதை வைத்து நம்முடைய மாநில பாடத்திட்டம் தரத்தில் குறைவானது என்ற முடிவுக்கு அவர் வந்தார் என்று தெரியவில்லை.
என்னை பொருத்தவரை மாணவர்களை சுயமாக சிந்திக்க தூண்டுகின்ற கல்விமுறை தான் சிறந்த கல்வி முறை அந்த வகையில் பார்த்தால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் கல்வி முறை தான் மாணவர்களை சிந்திக்க வைக்கின்ற கேள்வி கேட்க வைக்கின்ற கல்வி முறையாக உள்ளது. தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த பல பேர் விஞ்ஞானிகளாக, இந்தியாவிலேயும் அமெரிக்கா மாதிரியான வெளிநாடுகளிலும் ஐடித்துறையில் பெரிய பெரிய பதவிகளில் உள்ளனர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அப்போது இருந்த மாநிலக் கல்வி முறையை விட கலைஞர் கொண்டு வந்த சமச்சீர் கல்வி முறை இன்னும் தரமானதாக உள்ளது.
அப்படி இருக்கும் பொழுது தமிழ்நாட்டின் கல்வி முறையை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி குறை சொல்பவர்கள் நம்முடைய ஆசிரியர்களையும் மாணவர்களையும் அவமதிப்பதற்கு சமம். அதை நம்முடைய முதலமைச்சர் அவர்களும் திராவிடம் ஆடல் அரசும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். யார் என்ன சொன்னாலும் தற்போது உள்ள மாநில கல்வி படிக்கிற மாணவர்கள் எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை படைக்கப் போவது உறுதி என்றும் அந்த சாதனைக்கு எல்லாம் இங்கு வந்துள்ள ஆசிரியர்கள் நீங்கள் ஒவ்வொருத்தரும் அடிப்படை காரணமாக இருப்பதும் உறுதியென தெரிவித்தார்.
நம்முடைய மாநில கல்வி தரம் இந்தியாவில் மிகச்சிறந்தது என்று சொன்னால் நம்முடைய பள்ளி ஆசிரியர்கள் மிக சிறந்தவர்கள் இதனை ஆளுநர் மட்டுமல்ல அனைவரும் உங்கள் உணர்ந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!