Tamilnadu

இரயில் நிலையத்தில் தொலைந்து போன சிறுமி... வெறும் 3 மணி நேரத்தில் தாயிடம் ஒப்படைத்த போலீஸ் !

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் இரயில் நிலையத்தின் நடைமேடை எண்.02-ல் நேற்று (01.09.2024) சுமார் 09.30 மணியளவில் காரைக்கால் விரைவு இரயில் புறப்பட்டது. அப்போது அங்கே கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் நின்று அழுதுகொண்டிருந்தார். இதனை கண்ட இருப்புப்பாதை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர், சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சிறுமி அழுதுகொண்டே, தான் இரயில் வண்டியிலிருந்து இறங்கி விட்டதாகவும் தனது அம்மா மேரி இரயில் வண்டியில் பயணம் செய்வதாக கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பாதுகாப்பு நலன் கருதி காவலர்கள் மூலம் Aradhana social service And Skill development அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் சிறுமியின் பெற்றோரை கண்டறிய, அவர் பயணித்த இரயில் வண்டியில் பயணம் செய்யும் பயணிகளிடம் சிறுமியை பற்றி தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் அதே வண்டியில் பயணம் செய்த சிறுமியின் தாயார் மேரி என்பவருக்கு தகவல் கிடைத்தது.

தொடர்ந்து விசாரிக்கும்போது கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து பெரியநாகதுணை இரயில் நிலையம் அருகே நாகமங்கலம் கிராமத்தில் உள்ள மாதா கோவிலுக்கு வந்நதாகவும், இரயில் வண்டி ஒசூர் இரயில் நிலையம் வந்ததும் பெரியநாகதுணை இரயில் நிலையம் என நினைத்து தெரியாமல் இறங்கி ஏறும் போது சிறுமியை நடைமேடையில் விட்டு ஏறிவிட்டதாகவும் கூறினார்.

இதையடுத்து சிறுமி அவருடைய தாயாரிடம் அன்றைய தினம் சுமார் 12 மணியளவில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். இரயில் பயணிகள் பாதுகாப்பு சம்மந்தமான புகார்களுக்கு 24x7 இருப்புப்பாதை காவல் உதவி மைய எண். 1512 மற்றும் வாட்ஸ்அப் எண். 99625-00500 ஐ தொடர்பு கொள்ளவும்.

Also Read: ரூ.100 கோடி நில மோசடி : அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் அதிரடி கைது!