Tamilnadu
எழும்பூர் - நாகர்கோவில்... மதுரை - பெங்களூரு... - புதிதாக 2 வந்தே பாரத் சேவை தொடக்கம் - பயண விவரம் !
சென்னை சென்ட்ரலில் இருந்து இந்த வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா இன்று நடைபெற்றது. குறிப்பாக சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும். இந்த ரயில் எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவிலை அதேநாள் மதியம் 1.50 மணிக்கு அடையும்.
அதேபோல், மறுமார்க்கமாக, இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 11 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 16 பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன. 1248 பேர் இந்த ரயிலில் பயணிக்க முடியும்.
இதில் மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வந்தே பாரத் ரயில் சேவை (20671-20672) வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட்டை பகுதியை சென்றடையும்.
மேலும், மறுமார்க்கமாக, இந்த ரயில் பெங்களூரு கண்டோன்மென்ட்-ல் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு, அதேநாள் இரவு 9.45 மணிக்கு மதுரையை சென்றடையும். இந்த ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
=> எழும்பூர் - நாகர் கோவில் :
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் சாதாரண இருக்கைகள் பெட்டியில் (சி.சி.,) சென்னையிலிருந்து தாம்பரத்திற்கு ரூ.380, விழுப்புரத்திற்கு ரூ.545, திருச்சிக்கு ரூ. 955, திண்டுக்கல்லுக்கு ரூ.1105, மதுரைக்கு ரூ.1200, கோவில்பட்டிக்கு ரூ.1350, திருநெல்வேலிக்கு ரூ.1665, நாகர்கோவிலுக்கு ரூ.1760 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உயர் வகுப்பு இருக்கைகளுக்கு சென்னையிலிருந்து தாம்பரத்திற்கு ரூ.705, விழுப்புரத்திற்கு ரூ.1055, திருச்சிக்கு ரூ.1790, திண்டுக்கல்லுக்கு ரூ.2110, மதுரைக்கு ரூ.2295, கோவில்பட்டிக்கு ரூ.2620, திருநெல்வேலிக்கு ரூ.3055, நாகர்கோவிலுக்கு ரூ.3240 கட்டணமாக நிற்ணயிக்கப்பட்டுள்ளது. உணவுக்கான கட்டணமும் சேர்த்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
=> மதுரை - பெங்களூர் :
அதேபோல், பெங்களூர் ரயிலில் மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூ.440, திருச்சிக்கு ரூ.555, கரூருக்கு ரூ.795, நாமக்கல்லிற்கு ரூ.845, சேலத்திற்கு ரூ. 935, கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூ.1555, பெங்களூரு கண்டோன்மெண்ட்டிற்கு ரூ.1575 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே ரயிலில் உயர்வகுப்பு (எக்ஸ்கியூட்டிவ் கோச்- இ.சி.,) மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ரூ.825, திருச்சிக்கு ரூ.1075, கரூருக்கு ரூ.1480, நாமக்கல்லிற்கு ரூ.1575, சேலத்திற்கு ரூ.1760, கிருஷ்ணராஜபுரத்திற்கு ரூ.2835, பெங்களூரு கண்டோன்மெண்ட்டிற்கு ரூ.2865 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் பொதுமக்கள் சேவைக்காக இதனை காணொளி காட்சி மூலமாக பங்கேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் உட்பட ரயில்வே துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!