Tamilnadu
”அடுத்த தலைமுறையினருக்காகச் சிந்திப்பவர் முதமைச்சர் மு.க.ஸ்டாலின்” : அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு!
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மண்டல அளவில் ’பெற்றோர்களை கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய 6 ஆவது மண்டல மாநாடு நெல்லை பாளையங்கோட்டையில் இன்று நடைபெற்றது.
இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினர். இம்மாநாட்டில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,"தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு திருநெல்வேலி என்று அழைக்கப்படுகிறது. அந்த அளவு கல்வியில் சிறந்து விளங்குகிறது திருநெல்வேலி.
1959 ஆம் ஆண்டு இதுபோன்று பள்ளி சீரமைப்பு மாநாடு திருச்செந்தூரில் நடைபெற்றது. அதில் ஜவர்ஹலால் நேரு பங்கேற்றதாக வரலாறு உண்டு. 1960 ஆம் காலக் கட்டத்தில் 77 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார்கள். அதன் மூலம் 2032 புதிய பள்ளிகள் இந்த வட்டாரத்தில் தொடங்கப்பட்டது.
படித்தால் கல்வி உதவி தருகிறேன் என்று சொன்னவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். "படி" கல்வி உதவி தருகிறேன் என்று சொன்னவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அரசின் திட்டங்களை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளிடம், இப்படியெல்லாம் திட்டம் இருக்கிறது நீ படிச்சா.. நல்ல இடத்திற்கு செல்ல முடியும் என்று கூறுங்கள். வறுமை உள்ளிட்ட எந்த ஒரு காரணத்தாலும் குழந்தைகளின் படிப்பு தடை பட்டுவிடக்கூடாது. அதற்காகத்தான் ’நான் முதல்வன்’ உள்பட திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்காகத்தான் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் முதலீட்டுகளை ஈர்த்துக் கொண்டு இருக்கிறார். இந்த திராவிட மாடல் அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதனால் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”கல்வி ஒன்றுதான் அழிக்க முடியாது சொத்து” என மாணவர்கள் மத்தியில் அடிக்கடி கூறுகிறார் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !
-
எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன? : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
-
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து : பயணிகள் அவதி... விவரம் என்ன ?
-
சில்வர் பேப்பர், பிளாஸ்டிக் கவரில் உணவை பார்சல் செய்தால் கடைக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை !