Tamilnadu
தெற்காசியாவின் முதல் இரவு நேர ஃ பார்முலா 4 பந்தயம் : எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் ?
தமிழ்நாடு அரசு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை பார்முலா 4 சர்க்யூட் மற்றும் இந்திய ரேசிங் லீக் கார் பந்தய போட்டி நடத்த உள்ளது. இந்தப் போட்டியானது இன்று மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற உள்ளது.
குறிப்பாக இந்தியாவில் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் பார்முலா 4 சர்க்யூட் பந்தயமாக இந்த போட்டி நடைபெற உள்ளது. இதன் மூலம் தெற்காசியாவிலேயே முதல்முறையாக இரவு நேர ஸ்ட்ரீட் ஃபார்முலா 4 சர்க்யூட் பந்தயத்தை நடத்தக்கூடிய நகரமாக சென்னை திகழ்கிறது. இந்த கார் பந்தயமானது போர் நினைவுச் சின்னத்திலிருந்து தொடங்கி ராஜாஜி சாலை வழியாக 3.5 கிலோமீட்டர் தொலைவு வரை நடைபெற உள்ளது.
அந்தப் போட்டிக்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ரேஸ் நடைபெறக்கூடிய பகுதி சுற்றிலும் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் எந்தவித சிக்கலும் இல்லாத வகையில் இந்த போட்டியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கார் பந்தயம் நடைபெற உள்ள நிலையில் கடந்த 30 ஆம் தேதி முதல் வருகின்ற 01 ஆம் தேதி வரை மதியம் 12.00 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருப்பதால் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக காமராஜர்சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரயில் நிலையம்), ஈவிஆர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
அதேபோல், மவுண்ட் ரோட்டில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படுகிறது. சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் போக்குவரத்து செல்ல தடை விதித்து மூடப்பட்டுள்ளது.
மேலும், காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இன்றி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்லவன்சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, பல்லவன் சாலை, ஈவிஆர் சாலை, சென்ட்ரல் இரயில்வே நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செல்ல தற்காலிக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!