Tamilnadu

”முருகன் மாநாட்டை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க காரணம் இதுதான்” : அமைச்சர் சேகர்பாபு சொல்வது என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் 2000-வது குடமுழுக்கு விழா மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பரசலூர் கிராமத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வீரட்டேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ”தி.மு.க ஆட்சி அமைந்தபிறகு இன்றுடன் 2000 கோவில்களுக்கு குடமுழுக்குகள் நிறைவு பெற்றுள்ளது. திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கிற்கு முதன்மையான ஆட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது.

ஆதீனங்கள் ஒருசேர இந்த ஆட்சியோடு இணக்கமாக இருந்து பக்தி பரவசத்தோடு ஆட்சியை ஆதரிப்பது கடந்த காலங்களில் நடந்தது கிடையாது.

முத்தமிழ் முருகன் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இம்மாநாட்டிற்கு எதிராக பல்வேறு வகையில் பலர் போராட்டங்களை தூண்ட பார்த்தனர். ஆனால் அனைத்தையும் மீறி உலகமே பாராட்டும் அளவிற்கு முருகன் மாநாடு நடைபெற்றுள்ளது. இம்மாநாடடிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால்தான் எதிர்க்கட்சிகளுக்கு பாராட்ட மனமில்லாமல் வசைப்பாடுகிறார்கள்.

ரூ.6750 கோடி கோயில் நிலங்கள் தற்போது வரை மீட்க்கப்பட்டுள்ளது. மேலும் 6,800 ஏக்கர் அளவிற்கு இடங்கள் மீட்கப்பட்டுள்ளது.தொடர்ந்து கோயில் சொத்துக்கள் மீட்கும் வேலைகள் நடந்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.

Also Read: “தெற்காசியாவிலேயே முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலம் தமிழ்நாடு!” : அமெரிக்காவில் முதலமைச்சர் பெருமிதம்!