Tamilnadu
"ஆதீனங்கள் இணக்கமாக இருந்து ஒருசேர ஆட்சியை ஆதரிக்கிறார்கள்" - அமைச்சர் சேகர்பாபு !
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் 2000-வது குடமுழுக்கு விழா மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே பரசலூர் கிராமத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வீரட்டேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, "திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கிற்கு முதன்மையான ஆட்சியாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. ஆதீனங்கள் ஒருசேர ஆட்சியோடு இணக்கமாக இருந்து, பக்தி பரவசத்தோடு ஆட்சியை ஆதரிப்பது கடந்த காலங்களில் நடந்தது இல்லை. அது இப்போதுதான் நடக்கிறது.
முருகன் முத்தமிழ் மாநாடு இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.பலர் பல்வேறு வகையிலும் போராட்டங்களை தூண்ட பார்த்தனர். அனைத்தையும் மீறி உலகமே பாராட்டும் அளவிற்கு முத்தமிழ் மாநாடு நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்வுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பை கண்டு எதிர்க்கட்சிகள் எப்படி இதனை பாராட்டுவார்கள்? அதைப் பற்றி வசை பாடத் தான் செய்வார்கள்.
ரூ.6750 கோடி ரூபாய் கோயில் நிலங்கள் தற்போது வரை மீட்கப்பட்டு உள்ளது. 6,800 ஏக்கர் அளவிற்கு இடங்களும் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்கின்ற வேட்டையை இந்த அரசு தொடரும். இறைவன் சொத்து இறைவனுக்கே.
கோயில் நகைகளை உருக்கி டெபாசிட் செய்வதற்கு பல்வேறு வகையில் எதிர்ப்புகள் வந்தாலும் , அந்தத் திட்டம் பயன் தரக்கூடிய திட்டமாகவே உள்ளது. பயன்பாட்டில் இருக்கக்கூடிய பாரம்பரிய நகைகளை தவிர்த்து புதிதாக பக்தர்கள் வழங்கிய நகைகள் ஒன்றிய அரசின் நகை உருக்கு ஆலைக்கு கொண்டு சென்று உருக்கி எந்த கோயிலில் இருந்து எடுத்துச் சென்றோமோ அதே கோயிலில் டெபாசிட் செய்து வருகிறோம். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. 15 கோடிக்கு வருவாய் வரும் அளவில் கோவில் நகைகள் மதிப்பீடும் செய்யும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.
Also Read
-
மகனுக்காக அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்.. வேலைவாய்ப்பு என்று கூறி மாணவர்களை வரவழைத்த அர்ஜுன் சம்பத் -கண்டனம்
-
Carrom World Cup : “பெருமை கொள்கிறேன் மகளே...!” - தங்கம் வென்ற காசிமா குறித்து முதலமைச்சர் நெகிழ்ச்சி !
-
தொடரும் அங்கீகாரம்... 55-வது கோவா சர்வதேச திரைப்பட விழா : சிறந்த வெப் சீரீஸ் விருதுக்கு ‘அயலி’ பரிந்துரை!
-
“அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார்...” - பழனிசாமி பேச்சுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி !
-
அவதூறு பேச்சு... பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரி கைது... புழல் சிறையில் அடைப்பு !