Tamilnadu
உணவில் கலப்படம் : “சட்டபூர்வமான நடவடிக்கைக்கு அரசு எப்போதும் தயங்காது”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் !
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உணவு பாதுகாப்பு துறை சார்பில் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலமாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 127 உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஓமந்தூரார் அரசு பண்ணுக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது மேடையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, "தமிழ்நாடு உணவு பாதுகாபுத்துறை தரமான பாதுகாப்பான உணவு பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் பணியாற்றி வருகிறது.235 பணியிடங்கள் ஏற்கனவே உள்ளது இப்போது 127 இடங்கள் நிரப்படவுள்ளது. முதல்முறையாக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக முதல்முறையாக இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யபட்டுள்ளார்கள்.
இப்போது பணியிடங்கள் நிரப்படும் போதே பணி ஆணைகள் பெறும் போதே கலந்தாய்வு நடத்தி விரும்பும் இடத்திற்கு கொடுக்கப்பட்டது மருத்துவத்துறையில் இது போல் வேறு எங்கு நடந்ததில்லை. எந்த மாநிலத்திலும் நடைபெற்றதில்லை.
உணவு வணிக இடங்களை ஆய்வு செய்தல், பதிவு சான்று, உணவு மாதிரி எடுத்தல், ஆய்வு அனுப்பி முடிவுகளின் படி சட்டரீதியான நடவடிக்கைகள் எடுத்தல் இது தான் பணி. தமிழ்நாட்டில் அசம்பாவிதங்கள் நடப்பதை கண்டுக்கொள்ளாமல் இருக்க முடியாது. இதற்கு முன் கோவை ஐஸ்கிரீமில் மதுபான கலப்பது தொடர்பான புகாரில் கடை மூடி சீல் வைக்கப்பட்டது.
கொஞ்சமும் சலனமின்றி அச்சமின்றி கலப்படம் செய்கிறார்கள். தவறுகளை உடனடியாக கலைய வேண்டும். தவறு யார் செய்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சட்டபூர்வமான நடவடிக்கைக்கு அரசு எப்போதும் தயங்காது. இந்த நியமனங்களை எதிர்த்து கிட்டத்தட்ட 20 வழக்குகள் சட்டபோராட்டம் நடத்தி சரிசெய்து உங்களுக்கு அரசு பணி ஆணையை வழங்குகிறது. அதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்கள் பணியினை உணர்ந்து செய்து அரசுக்கு நற்பெயர் பெற்றுத்தர வேண்டும்.
பதிவு சான்றிதழ் பெறாத இடங்களுக்கு பதிவு செய்யப்படவேண்டும் அதனை நீங்கள் செய்யவேண்டும். ஆலயங்களில் வழங்கப்பட்டும் பிரசாதத்திற்கு சான்றிதம், சுத்தமான உணவு வளாக சான்றிதழ் என்று பலவற்றை செய்துள்ளது.உபரி உணவினை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். நிகழ்ச்சிகளில் வீணாகும் உணவினை தன்னார்வலர்களிடம் அளித்து உணவு தேவைவுள்ளோருக்கு கொடுக்கப்படுகிறது.
ஒரு முறை உபயோகப்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தகூடாது என்பதால் அதனை பெற்று மறுசுழற்சி செய்து மாற்று பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது.வாட்ஸ் அப் எண் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக உள்ளது. குட்கா பொருட்கள் தடை செய்யப்பட்டு உரிய முறையில் ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளது.
பான் ப்ராக் குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்டவற்றை விற்ககூடாது. 67,44 பணியிடங்களுக்கு புதிய ஆணைகள் தரப்பட்டுள்ள. 6,667 மருத்துவர்கள் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் வழக்கு போட்டவர்கள் உங்கள் குறைகளுக்கு தீர்வு காணவேண்டும் கதவுகள் திறக்கப்பட்டே இருக்கும். ஆணைகளை பெற்ற நீங்கள் அரசுக்கு செய்வது நேர்மையாக பணியாற்றி பெயர் எடுக்கவேண்டும்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "உணவங்களை ஆய்வு செய்தல், பதிவு சான்றிதழ் வழங்குதல், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் குறித்த ஆய்வு உள்ளிட்ட பணிகளை செய்யவுள்ளார்கள். 235 பணியிடங்கள் ஏற்கனவே உள்ளது. இப்போது 127 இடங்கள் நிரப்படவுள்ளது.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக முதல்முறையாக இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யபட்டுள்ளார்கள். உபரி உணவினை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்.
நிகழ்ச்சிகளில் வீணாகும் உணவினை தன்னார்வலர்களிடம் அளித்து உணவு தேவைவுள்ளோருக்கு கொடுக்கப்படுகிறது. தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு பரிசுகளை பெற்று வருகிறது. தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலோடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
முதல்முறையாக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக முதல்முறையாக இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யபட்டுள்ளார்கள். இப்போது பணியிடங்கள் நிரப்படும் போதே பணி ஆணைகள் பெறும் போதே கலந்தாய்வு நடத்தி விரும்பும் இடத்திற்கு கொடுக்கப்பட்டது. மருத்துவத்துறையில் 6,744 பணியிடங்களுக்கு புதிய ஆணைகள் தரப்பட்டுள்ளன. இன்று 127 பேர் இன்னும் காத்துக்கொண்டு இருப்பவர்கள். 6,667 பேர் மருத்துவர்கள் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வழக்குகள் நிலுவையில் உள்ளது பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.
36 மருத்துவக் கல்லூரியிலும் முதல்வர்கள் உள்ளார்கள். சில இடங்களில் பொறுப்பு முதல்வர்கள் உள்ளனர். 26 முதல்வர்களுக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு நியமிக்கப்படுவர். இப்போது அனைத்து பணிகளுக்குமே கலந்தாய்வு வைத்து தான் நிரப்புகிறோம். இடங்களை தேர்வு செய்யும் கலந்தாய்வின் படி நிரப்படும்.
உணவங்களை ஆய்வு நடத்துவதில் பாகுபாடு இல்லை அனைத்து தரப்பு உணவங்களிலும் ஆய்வு நடத்தப்படும். உணவு பதப்படுத்தல் என்ற ஒன்று உள்ளது. உணவகத்தினரும் மனசாட்சியோடு நடந்துக்கொள்ள வேண்டும்" என்றார்.
Also Read
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!