Tamilnadu
“UPI போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாக மஞ்சப்பை!” : அமைச்சர் மெய்யநாதன்!
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பசுமை புத்தாய்வு திட்டத்தின் கீழ் மஞ்சப்பை விருதுகள், பசுமை முதன்மையாளர்கள் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்த்த பள்ளிகளுக்கு மஞ்சப்பை விருது மூன்று பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. முதலிடம் பெற்ற பள்ளிக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
தொழிற்சாலைகளில் மரம் வளர்த்தல் மற்றும் சிறந்த இயற்கை சேவைகளுக்கான பசுமை முதன்மையாளர்கள் விருதும் வழங்கப்பட்டது.
நீர்நிலைகளில் மசுபாட்டை தவிர்க்க நீல்ப்படை என்ற விழிப்புணர்வு அமைப்பும் தொடங்கி வைக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர் சந்திப்பில் பேசியது,
மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு திட்டத்தின் மூலம் 25% அளவு பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. மஞ்சப்பை வெண்டிங் மெஷின்களில் UPI போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாக மஞ்சப்பை பெரும் முறையை அறிமுகப்படுத்த உள்ளோம்.
ஒலி மாசுவை கட்டுக்குள் கொண்டு வருவது மிக முக்கியமான பொறுப்பாக உள்ளது. குறிப்பாக பகல் நேரத்தில் குடியிருப்பு, பள்ளி,கல்லூரி பகுதிகளில் ஒலியின் அளவு 55 டெசிபெல், இரவு நேரத்தில் 45 டெசிபெல் ஒலியின் அளவு இருக்கலாம்.
தொழிற்சாலை பகுதிகளில் 75 டெசிபெல் வரை ஒலியின் அளவு இருக்கலாம் என்ற விதிமுறைகள் உள்ளது.நீர் மாசு,காற்று மாசு போல ஒலி மாசு குறித்தும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள பட உள்ளது.
தற்போது பொது இடங்களிலும் ஒலி அளவை அளவீடு செய்யும் பணி நடைபெற உள்ளது.ஒலி மாசுபாட்டால் செவித்திறன் பாதிப்பு ஏற்படுகிறது.நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.மக்களிடம் ஒலி மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது அதிக சத்தம் உள்ள பட்டாசுகளை தவிர்க்க பசுமை பட்டாசுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தோம். அதிக ஒலி அளவு கொண்ட பட்டாசுகளை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !