Tamilnadu
நிதியை நிறுத்தி NEPயை ஏற்றுக் கொள்ள அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு : அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு!
“சமக்ரா சிக்ஷா” திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள அழுத்தம் கொடுக்கிறது என அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ், சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்கிய வேண்டிய ரூ.573 கோடியை ஒன்றிய அரசு இன்னும் வழங்கவில்லை. இது குறித்து முதலமைச்சரும் அமெரிக்கா செல்வதற்கு முன்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
மேலும் நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் கனிமொழி தலைமையில, நான் உட்பட தமிழ்நாட்டு எம்.பிக்கள் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் தேசிய கல்விக் கொள்கையில் இணைத்தால் மட்டுமே நிதியை ஒதுக்க முடியும் என்று கூறுகிறார்கள்.
இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் உடனடியாக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதேநேரம் ஒன்றிய அரசால் ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை சமாளித்து பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார். ஆசிரியர்களின் ஊதியம் வழங்குவதில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்