Tamilnadu
BS VI புதிய பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி : பயணிகளுக்கான முக்கிய அம்சங்கள் என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்று சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழக, மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 90.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் BS VI 150 புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட BS-VI 200 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 150 BS-VI புதிய பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டது. புதிய பேருந்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் கீழ்கண்ட சிறப்பு அம்சங்கள் உள்ளது.
BS-VI புதிய பேருந்தில் பயணிகளுக்கான முக்கிய அம்சங்கள்:
இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், பயணிகளின் சொகுசு பயணத்திற்காக முன்புற Air Suspension வசதி செய்யப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக 50 பேருந்துகளில் கீழ் படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளன.
படுக்கை இரண்டிற்கும் இடையே அதிகரித்த இடம் மற்றும் தடுப்பு வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக தனிப்பட்ட சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனியாக பயணிகள் வசதிக்காக தனித்தனி மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பிற்காக ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அபாய ஒலி எழுப்பி (SOS) அமைக்கப்பட்டுள்ளது.
நடத்துனரால் பயணிகளுக்கு தகவல் அறிவிப்புகளுக்கான ஒலி பெருக்கி (Micro Phone) அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் கடிகராம் அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் சுமை பெட்டி மற்றும் சரக்கு பார்சலுக்காகவும் போதிய இட வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
BS VI புதிய பேருந்துகளின் முக்கிய அம்சங்கள்:
அரசாங்க விதிமுறைகளின் படி காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் BS-VI புதிய பேருந்துகளின் engine வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் செயல் திறனுக்காக எலக்ட்ரானிக் மேக்னடிக் ரேடர் (EMR) நிறுவப்பட்டுள்ளது.
இன்ஜின் தீயை முன் கூட்டியே திறம்பட அனுமானித்து, தீ கட்டுபட்டு அடக்கும் அமைப்பு (FDSS) கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!