Tamilnadu
”ஆவின் பொருட்கள் ரேஷன் கடையில் விற்பனை” : அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி!
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் பொது மேலாளர் மற்றும் துணை பதிவாளர்கள் மாதாந்திர ஆய்வு கூட்டம் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ்,"புதிய ஆவின் பொருள்களை அறிமுகம் செய்து அதனை தீவிர சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஆவின் பொருட்களை ரேஷன் கடையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து பகுதிகளிலும் ஆவின் பால்கள் தடை இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஆவின் பொருட்கள் கூடுதலாக விற்பனை செய்வதற்கும் புதிய ஆவின் பொருட்கள் சந்தைப்படுத்துவதற்கும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 38 லட்சம் லிட்டர் ஆவின் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பண்டிகை காலங்களில் ஆவின் பால் பொருட்கள் சலுகை விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் மனித விபத்துக்களை தடுக்கும் வகையில்ஆவின் பொருட்களை தயாரிக்க தானியங்கி எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிறிய வகை பாக்கெட்டுகளில் ஆவின் நெய் விற்பனை செய்யப்படவுள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!