Tamilnadu

கலைஞர் வழியில் செயல்பட்டு வெற்றிநடைபோடும் தளபதி : திமுக தலைவராக 7-ம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

28.8.2018 - புதிய விடியல் நாள்! - திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள்.! இந்தியாவில் தவிர்க்க முடியாத புதிய அரசியல் பாதையை உருவாக்கி இருக்கிறார். திமுக தலைவராக பொறுப்பேற்ற பின் அனைத்துத் தேர்தல்களில் வெற்றி கண்டவர்!

தமிழ்நாட்டின் பெருமையை இந்தியாவிற்கே பறைசாற்ற வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி நாட்டிற்கே வழிகாட்டுகிறது திராவிட மாடல் அரசு. தமிழாட்சியாக - தமிழர் ஆட்சியாக நடத்திக் காட்டி வருகிறார் தலைவர் மு.க.ஸ்டாலின் !

பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் கட்டிக்காத்த, மாபெரும் இயக்கமான தி.மு.க.வின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்று இன்றுடன் 6 ஆண்டுகளை நிறைவு செய்து ஏழாம் ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளார். திமுக தலைவராக பொறுப்பேற்ற பின் அனைத்துத் தேர்தல்களில் வெற்றி கண்டிருக்கிறார். இந்தியாவில் தவிர்க்க முடியாத புதிய அரசியல் பாதையை உருவாக்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

நூற்றாண்டு பாரம்பரியமிக்க திராவிட இயக்கத்தின் ஆணி வேராகத் திகழும் திமுக எனும் பேரியக்கம், தமிழ்மொழி வளர்ச்சி, தமிழர் நலன், தமிழ்நாட்டின் வளம் ஆகியவற்றை உயிர்மூச்சாக காத்து வருகிறது. அரை நூற்றாண்டு காலம் திமுகவின் தலைவராக அரும்பெரும் சாதனைகள் படைத்த முத்தமிழறிஞர் கலைஞரின் மறைவைத் தொடர்ந்து, கடந்த 2018 ஆகஸ்ட் 28-ஆம் தேதி, திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்...

ஆம்... 28.8.2018 - புதிய விடியல் நாள்!

மூவாயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழினத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செலுத்தப் பாடுபட்டுக் கொண்டு இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' பொறுப்பேற்றுக் கொண்ட நாள்!. காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணாவும் - திருவாரூர் தந்த திராவிடத் திருமகன் முத்தமிழறிஞர் கலைஞரும் கட்டிக் காத்த கழகத்தை மூன்றாம் தலைமுறையாக இருந்து - தனது தலையால் தாங்க மு.க.ஸ்டாலின் உறுதி எடுத்துக் கொண்ட நாள்!

திமுக எனும் பேரியக்கத்தின் தலைவராக 6 ஆண்டுகளை நிறைவுசெய்து 7-வது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. முதலில் அரசியல் வெற்றிகளை, திமுகவுக்கு பெற்றுக் குவித்தார். கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற 6 மாதத்திற்குள் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் - ஒரே ஒரு தொகுதி நீங்கலாக - அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெற வைத்தது அவரது உழைப்பின் சாட்சியம்.

இதனைத்தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆறாவது முறையாக அரியணை ஏற வைத்தது மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கும் - திறமைக்கும் கிடைத்த சாட்சியம். முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்த கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி - ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி - அவை அனைத்திலும் பெரும்பான்மை இடங்களை திமுக கைப்பற்றக் காரணமாக அமைந்தது தலைவர் மு.க.ஸ்டாலினின் திறமையும் ஆற்றலுமே ஆகும்!

2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பாசிச பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான "இந்தியா" கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

2024 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றிவாகை சூடியது.

2019 நாடாளுமன்றத் தேர்தல் - 2021 சட்டமன்றத் தேர்தல் - உள்ளாட்சித் தேர்தல் - 2024 நாடாளுமன்றத் தேர்தல் என களம் கண்ட அத்தனை தேர்தல்களிலும் திமுகவின் வெற்றி என்பது தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆளுமைக்குக் கிடைத்த சான்றாகும்.

'திராவிட மாடல்' என்று சொன்ன ஒற்றைச் சொல்லில் தலைவர் - முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றால் யார் என்று அவர் முகம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. கடந்த மூன்றாண்டு கால ஆட்சியில், கடல்போல் பல சாதனைகளை செய்துள்ளது திராவிட மாடல் அரசு.

* அரசுப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள வழி வகை செய்து பெண்களின் வாழ்வில் ஒளியேற்றிய, விடியல் பயணம்,

* பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் அளிக்க மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்,

* தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்,

* அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படிக்கச்செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும், தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம்,

* தமிழ்நாட்டு இளைஞர்களை சாதனையாளர்களாக மாற்றிட நான் முதல்வன் திட்டம்,

* இல்லம் தேடிக் கல்வி..

* மக்களைத் தேடி மருத்துவம்,

* நம்மை காக்கும் 48 திட்டம்,

* பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதி...

* ஏழை, எளிய மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க, கலைஞர் கனவு இல்லம் திட்டம்...

* சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை..

* தென்தமிழ்நாட்டின் அறிவுத் திருக்கோயிலாக விளங்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம்

- என கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் நாட்டிற்கே வழிகாட்டும் பல்வேறு மகத்தான திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் மட்டுமின்றி கனடா போன்ற உலக நாடுகளும் பின்பற்றி தங்களது நாட்டில் அமல்படுத்தியுள்ளன.

திராவிட மாடல் அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் ஏதோ ஒரு வகையில் பயனடைந்து வருகின்றனர். பொருளாதார முன்னேற்றத்திலும் தமிழ்நாட்டை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது திராவிட மாடல் அரசு.

கடந்த மூன்று ஆண்டுகளில், 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்குடனானப் பயணத்தில் மற்றொரு கட்டமாக, தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயன் தருவதாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு, சர்வதேச தொழில் முதலீடுகளை ஈர்க்க தற்போது அமெரிக்கா சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்தும் இலக்குடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். நாட்டின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் முதல் மாநிலம், தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலம், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் முதலிடம், ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் முதலிடம், மருத்துவத் துறையில் முன்னணி மாநிலம், மகளிர் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முதலிடம்,

வேளாண் உற்பத்தியில் முன்னணி மாநிலம், தோல் பொருள்கள் ஏற்றுமதியில் தலைசிறந்த மாநிலம், மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்,

தொழில் வளர்ச்சிக்கான 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தியதில் முதலிடம்,

இப்படி தமிழ்நாட்டின் பெருமையை இந்தியாவிற்கே பறைசாற்ற வைத்திருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு. தமிழாட்சியாக - தமிழர் ஆட்சியாக நடத்திக் காட்டி வருகிறார் தலைவர் மு.க.ஸ்டாலின். சமூகநீதித் தத்துவத்தில் சிறுசரிவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

தமிழினத் தலைவர் கலைஞர் வழியில் செயல்பட்டு வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கிறார்.. கலைஞரின் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்! என்று எப்போதும் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார் தலைவர் மு.க.ஸ்டாலின்.

Also Read: தேசிய அரசியலில் தனி முத்திரை : திமுக தலைவராக 7-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!