Tamilnadu
சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகிறார் எடப்பாடி பழனிசாமி - காரணம் என்ன?
அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டது. அந்த வகையில் அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளருக்காக பிரசாரம் மேற்கொண்டார். அதன்படி கடந்த ஏப்.15-ம் தேதி சென்னை புரசைவாக்கம் பகுதியில் மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்த சாரதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என போலியான குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், பழனிசாமிக்கு எதிராக எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அதில், 'தேர்தல் நேரத்தில் பழனிசாமி எனக்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் துளிகூட உண்மை இல்லை. தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.17 கோடியில் ரூ.17 லட்சம் தான் மீதம் உள்ளது. 95 சதவீதத்துக்கும் மேலான தொகை தொகுதியின் மேம்பாட்டுக்கு செலவழித்துள்ளேன். அதற்கான பணிகளையும் பட்டியலிட்டுள்ளேன்.
அரசியல் உள்நோக்கத்துடன் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரது பேச்சு எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, அவர் மீது குற்றவியல் அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (ஆக. 27) விசாரணைக்கு வரவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராகவுள்ளார்.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!