Tamilnadu
“அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மிகப்பெரிய வெற்றி” - அமைச்சர் சேகர்பாபு நெகிழ்ச்சி!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று (ஆக 24) தொடங்கிய 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' இன்றுடன் (ஆக 25) நிறைவடைகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டு விழாவை காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் இந்த விழா, முருகரின் பெருமையை உலகறிய செய்யும் முயற்சியாகும்.
இந்த நிகழ்ச்சியை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி கட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இன்றுடன் மாநாடு நிறைவடையவுள்ள நிலையில், 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது. இந்த சூழலில் இன்று இரண்டாம் நாள் துவக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்த சமயத்தில் பல்வேறு பணிகளை செய்து வருகிறார். ஆன்மீக அன்பர்களுக்கு தேவையானவற்றையும் திருக்கோவில் பணிகளை செய்து வருகிறார்கள்.
தமிழ்நாடு தலைமையில் அமைந்துள்ள இந்து சமயம் ஆலோசனை குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற பல்வேறு முடிவுகளை தொடர்ந்து ஆய்வு செய்து பல பல திட்டங்களை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தலைமையில் கடந்த 27/2/2014 அன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆம் தேதி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு பணிகளையும் மேற்கொண்டோம். பல்வேறு ஆதீனங்கள் குழுவில் அமைக்கப்பட்டு துறையில் செயலாளர் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளும் பணியாற்றினர்.
இந்த மாவட்டத்தினுடைய அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஆன்மீக பெரியவர், நீதிபதிகள், சொற்பொழிவாளர்கள் என பலர் உரையாற்றினர்.
ஜப்பான், மலேசியா என பல்வேறு நாடுகளை சார்ந்தவர்கள் பங்கேற்றது மகிழ்ச்சி. வெளி நாடுகளில் இருந்து 20-லிருந்து 30 ஆயிரம் பேர் வருவார்கள் என எண்ணினோம். ஆனால் லட்சக்கணகானோர் கூடினர். இதுவே மாநாட்டின் வெற்றியை காட்டுகிறது. VR, 3D போன்ற தொழில்நுட்பங்களுடன் முருகன் கண்காட்சியும் நடைபெறுகிறது.
சுமார் 50 ஆயிரம் பேருக்கு கட்டணமில்லாமல் பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது; 1.25 லட்சம் பேர் உணவருந்தியுள்ளார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முடுவெடுக்கப்பட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. பழனியை சுற்றிலும் தற்போது அரோகரா கோஷமே கேட்கிறது. பொதுமக்கள் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கண்காட்சி இன்னும் 5 நாட்கள் நீடிக்கிறது.
எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் இந்த அரசு. முருகன் மாநாட்டினை பொறுத்தவரை அரசும் இந்துசமய அறநிலையத்துறை நடத்தும் நிகழ்ச்சி. முருகன் அடியார்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் நிகழ்ச்சிதான் இது. முதல்வர் பணி நிமித்தமாக நேரில் வர இயலவில்லை. எனவே அவர் காணொளி காட்சி வாயிலாக இணைந்தார்கள்.
எங்கோ இருந்து கொண்டு, தவறாக பேசுபவர்களினால் தேவையற்ற கருத்துகள் முன்னோக்கியும் மாநாட்டு நோக்கம் பின்னோக்கி செல்லும். ஆகையால் இது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது" என்றார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!