Tamilnadu

‘புதுமைப்பெண்’களாக திகழும் மாணவிகளின் எதிர்காலத்திற்கு துணை நிற்போம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டடத்தை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”நூற்றாண்டு நாயகர் கலைஞர் அவர்களின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்திடும் வகையில், சென்னை பாரிமுனையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் ரூ.25 கோடிசெலவில் கட்டப்பட்டுள்ள புதியக் கட்டடத்துக்கு, ‘கலைஞர் நூற்றாண்டு கட்டடம்’ என்று நம் முதலமைச்சர் அவர்கள் பெயர் சூட்டியுள்ளார்கள்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டப் பெண்களுக்கு தொடக்கக்கல்வி மட்டுமின்றி உயர்கல்வியும் தங்குதடையின்றி சென்று சேர உழைத்தவர் நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் இணையும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் 'புதுமைப்பெண்', 'தமிழ்ப்புதல்வன்' போன்ற திட்டங்கள் தான், இன்று தமிழ்நாடு பல துறைகளில் பல சாதனைகள் அடைய காரணமாய் அமைந்திருக்கின்றன. திராவிட மாடல் அரசின் ‘புதுமைப்பெண்’களாகத் திகழும் மாணவிகளின் எதிர்காலம் சிறக்க என்றும் துணை நிற்போம் என தெரிவித்துள்ளார்.

Also Read: ‘Future is Here’ : Khelo India விளையாட்டுப் போட்டிகள் - 2023 குறித்த காலப்பேழை புத்தகம் வெளியீடு !