Tamilnadu
1,06,803 நபர்களுக்கு வேலைவாய்ப்பு - 47 தொழில் திட்டங்களை தொடங்கி வைத்தார்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.08.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களைத் தொடங்கி வைத்து, ரூ.51,157 கோடி முதலீட்டில் 41,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 28 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடன் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் விளைவாக, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 31 லட்சம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் ரூ.9.74 இலட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற முதலமைச்சரின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், தொழில் துறை சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் அவர்கள் மொத்தம் 1,06,803 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையில் ரூ.17,616 கோடி முதலீட்டிலான 19 தொழில் திட்டங்களை தொடங்கி வைத்து, ரூ.51,157 கோடி முதலீட்டிலான 28 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களின் விவரங்கள்:
முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்ட ரூ.51,157 கோடி முதலீட்டில் 41,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 28 நிறுவனங்களின் விவரங்கள்:
முதலமைச்சரால் இன்று அடிக்கல் நாட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்ட திட்டங்களில், ரூ.59,454 கோடி முதலீட்டிற்கான 32 தொழில் திட்டங்கள் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரீன்கோ குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தியாவின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களின் ஒன்றான கிரீன்கோ குழுமத்தைச் சேர்ந்த கிரீன்கோ எனர்ஜீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரூ.20,114 கோடி முதலீடு மற்றும் 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 3 நீரேற்று புனல் மின் திட்டங்களை (Closed loop pumped storage projects) நிறுவுவதற்காக, முதலமைச்சர் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
டிட்கோ மற்றும் டாடா டெக்னாலஜீஸ் கூட்டுத்திட்டமான தமிழ்நாடு பொறியியல் மற்றும் புத்தாக்க மையத்திற்கு (TN ENGINE) அடிக்கல் நாட்டுதல்
டிட்கோ மற்றும் டாடா டெக்னாலஜீஸ் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து, தமிழ்நாடு பொறியியல் மற்றும் புத்தாக்க மையம் (TN ENGINE) என்ற ஒரு பொது பொறியியல் வசதி மையத்தை தொடங்க உள்ளது. கோயம்புத்தூர் - அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மொத்தம் ரூ.400 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின், ரூ.166.84 கோடி மதிப்பிலான முதற்கட்ட செயல்பாடுகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டி வைத்தார்.
இந்த மையம், 9 வளர்ந்து வரும் தொழில் நுட்ப ஆய்வகங்களைக் கொண்டிருக்கும். இரண்டு கட்டமாக, இந்த மையம் தொடங்கப்படவுள்ள நிலையில், மேம்பட்ட இயந்திர ஆய்வுக்கூடம், சேர்க்கை உற்பத்தி ஆய்வகம் உள்ளிட்ட 4 மேம்பட்ட, அதி நவீன தொழில் நுட்ப ஆய்வகங்களை முதற்கட்டமாக TN ENGINE நிறுவனத்தால் செயல்படுத்தப்பட உள்ளது. விமானவியல், இயந்திரவியல், மின்சாரவியல் மற்றும் பரிசோதனை போன்ற துறைகளில் உள்ள புத்தொழில்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான பொறியியல் ஆதரவுகளை இம்மையம் வழங்கும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!