Tamilnadu
நீதிபதிகள் குறித்து சர்ச்சை கருத்து : ஆடிட்டர் குருமூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
2020 ஆண்டு ஜனவரி 14 தேதி அன்று ‘துக்ளக்’ பத்திரிகையின் 51-வது ஆண்டு விழாவில் பேசிய ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ். குருமூர்த்தி, உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரி உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அளித்த மனுவை அப்போதைய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயண் நிராகரித்து உத்தரவிட்டிருந்தார்.
பின்னர் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துக்குப் பிறகு முந்தைய உத்தரவை ரத்து செய்து, குருமூர்த்திக்கு எதிராக அவமதிப்பு வழக்குதொடர அனுமதி கோரி முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரத்திடம், வழக்கறிஞர் துரைசாமி மீண்டும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து முந்தைய உத்தரவை அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் திரும்பப்பெற்றார். அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து எஸ்.குருமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, குருமூர்த்திக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரும் வகையில், தற்போதைய அரசின் தலைமை வழக்கறிஞரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து துரைசாமி தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், பாலாஜி அமர்வு, வழக்கு தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!