Tamilnadu
”மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றும் திராவிட மாடல் அரசு” : அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் தங்கம் தென்னரசு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர் ங்கம் தென்னரசு, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு கல்வித்துறையில் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 44 ஆயிரம் கோடிக்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தில் நாட்டம் கொண்ட அரசாக இந்த அரசு இருக்கின்றது. ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் கல்வியும் சுகாதாரமும் முக்கியமாக இருக்க வேண்டும் அதன்படி இந்த அரசு கல்விக்கும் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.
பள்ளிப்படிப்பை முடித்து மாணவிகள் உயர் கல்விக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காக புதுமைப் பெண் என்ற திட்டத்தை கொண்டு வந்து மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தையும் அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மாணவர்களின் எதிர்கால கனவுகளை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!