Tamilnadu
“ஆளுநரின் பேச்சை பொருட்படுத்த தேவையில்லை” - சமஸ்கிருதம் குறித்த கேள்விக்கு செல்வப்பெருந்தகை பதில் !
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அவரது 80-வது பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, மாவட்ட பொறுப்பு குழு தலைவர் அருள்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஐயப்பன், நிக்கோலாஸ் உள்ளிட்ட திருப்பெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை பேசியதாவது, "அடித்தட்டு மக்களும் உள்ளாட்சி பிரதிநிதிகளாக பதவி வகிக்க பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கொண்டு வந்தவர் முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி. தொழில் புரட்சிக்கு வித்திட்டவர் அவர். அவரது பிறந்த நாளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாகவும் திருப்பெருமந்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பாகவும் கொண்டாடுப்படுகிறது.
சமஸ்கிருதம் அறிவியல் சார்ந்த மொழி என தமிழக ஆளுநர் பேசிய கருத்து தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டின் நலனுக்கும் எதிரானது. அவரது பேச்சை யாரும் பொருட்படுத்த தேவையில்லை.” என்றார்.
முன்னதாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சமஸ்கிருத தின நிகழ்ச்சி நேற்று (ஆக.19) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசுகையில், ஆங்கில மொழி வந்த பிறகு, அது சமஸ்கிருதத்தின் பயன்பாட்டை குறைத்துவிட்டது என்றார். மேலும் சமஸ்கிருதம் ஒரு சக்தி வாய்ந்த மொழி என்றும், அறிவியல் பூர்வமான மொழி என்றும் கூறினார்.
அதோடு, சமஸ்கிருதம் அறிவியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியாதாகவும், பல நூற்றாண்டுகளுக்கு முன் சமஸ்கிருத மொழியில்தான் அறிவியல் இருந்ததாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!