Tamilnadu
கலைஞர் நாணயம் - காழ்ப்புணர்ச்சியில் பேசும் பழனிசாமி: அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ’கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்திற்கு அனுமதி ஆணை வழங்கும் விழா மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்த கொண்ட அமைச்சர் துரைமுருகன் 207 பேருக்கு வீட்டுமனை பட்டா ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது, ”கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு வீடு கட்ட அரசு ரூ.3.5 லட்சம் ஒதுக்குகிறது. இந்நிலையில் சிலர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக தகவல் வருகிறது.யாராவது லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க வேண்டும்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ”நாணயம் வெளியிடுவது மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தக்கூடிய ஒன்றாகும். முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், பேரறிஞர் அண்ணா ஆகியோருக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. காழ்ப்புணர்ச்சி காரணமாகவே கலைஞர் நாணயத்தை எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம் செய்கிறார். இது தவறான செயலாகும்.” என பதிலடி கொடுத்துள்ளார்.
Also Read
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !