Tamilnadu

கலைஞரின் நூற்றாண்டு விழாவுக்காக தமிழ்நாடு அரசின் ஓராண்டு பணிகள் - முழு விவரம் !

கடந்த ஒரு ஆண்டாக முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இதற்காக தமிழ்நாடு அரசு ஒரு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் :

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 22.05.2023 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்திட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

  • முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்திட தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் 5 ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

  • 2.6.2023 அன்று கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு "கலைஞர் 100" இலச்சினை வெளியிடப்பட்டது.

  • கலைஞர் நூற்றாண்டு நினைவு மருத்துவமனை 15.6.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கிண்டி கிங் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

  • கலைஞர் நூற்றாண்டு நூலகம் 15.07.2023 அன்று மதுரையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

  • கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான்-2023 போட்டியில் 73,206 நபர்கள் கலந்துகொண்டு கின்னஸ் சாதனை படைத்தனர்.

  • "www.kalaignar100.com" என்ற கலைஞர் நூற்றாண்டு விழா இணையதளம் 7.8.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

  • கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கிளாம்பாக்கத்தில் திறந்து வைக்கப்பட்டது.

  • கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மாண்புமிகு தமிழ்நாடு அரங்கம் முதலமைச்சர் அவர்களால் அலங்காநல்லூரில் 24.1.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.

  • சென்னை மெரினா கடற்கரையில் 26.2.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 'கலைஞர் உலகம்' திறந்து வைக்கப்பட்டது.

  • திண்டுக்கல் மாவட்டம் காளாஞ்சிப்பட்டியில், 'கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு மையம்' 27.2.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக அமைக்கப்பட்ட 12 சிறப்புக்குழுக்களின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரம்.

1.சட்டமன்ற நாயகர் – கலைஞர்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா "சட்டமன்ற நாயகர் கலைஞர்" குழுவின் மூலம் 37 மாவட்டங்களில் 120 பள்ளி மற்றும் கல்லூரிகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.

2. இதழாளர் - கலைஞர்

"இதழாளர் - கலைஞர்" புகைப்படக் கண்காட்சி 18.10.2023 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்றது.

3. ஏழைப்பங்காளர் – கலைஞர்

"ஏழைப்பங்காளர் கலைஞர்" இராமநாதபுரம் மாவட்டத்தில் 21.10.2023 அன்று கருத்தரங்கம், பட்டிமன்றம் நடத்தப்பட்டது மற்றும் அரங்கம் திறந்து கண்காட்சி வைக்கப்பட்டது.

4. எழுத்தாளர் - கலைஞர்

"எழுத்தாளர் - கலைஞர்" திருநெல்வேலி மாவட்டத்தில் 04.11.2023 அன்று கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

கலைஞரின் அரும்பங்களிப்பை எடுத்துரைக்கும் விதமாக "முத்தமிழ் தேர்" கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்னை வந்தடைந்தது.

5. பகுத்தறிவுச் சீர்திருத்தச் செம்மல் - கலைஞர்

"பகுத்தறிவுச் சீர்திருத்தச் செம்மல் - கலைஞர்" புகைப்படக் கண்காட்சி 25.11.2023 அன்று வேலூரில் நடத்தப்பட்டது. மற்றும் பகுத்தறிவுச் சீர்திருத்தச் செம்மல் கலைஞர் விழா மலர் வெளியிடப்பட்டது.

6. தொலைநோக்குச் சிந்தனையாளர் - கலைஞர்

"தொலைநோக்குச் சிந்தனையாளர்- கலைஞர்" - மையக் கருத்து பாடல் வெளியீடு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் கரூர் மாவட்டத்தில் 04.11.2023 அன்று நடத்தப்பட்டது.

7. கலைஞர் பண்பாட்டு பாசறை

"கலைஞர் பண்பாட்டு பாசறை" - கருத்தரங்கம், புகைப்படக் கண்காட்சி வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றது.

8. நவீன தமிழ்நாட்டின் சிற்பி - கலைஞர்

"நவீன தமிழ்நாட்டின் சிற்பி - கலைஞர்" - 27.2.2023 அன்று சேலம் மாவட்டத்தில் புகைப்படக் கண்காட்சி, கலை நிகழ்ச்சி, கவியரங்கம் சிறப்பாக நடத்தப்பட்டு விழா மலர் வெளியிடப்பட்டது..

9. நிறுவனங்களின் நாயகர் - கலைஞர்

"நிறுவனங்களின் நாயகர் - கலைஞர்" - சென்னை மாவட்டத்தில் 25.11.2023 அன்று கண்காட்சி, கருத்தரங்கம் நடத்தப்பட்டது. மற்றும் நிறுவனங்களின் கலைஞர் மலர் மற்றும் நாயகர் குறும்படம் வெளியிடப்பட்டது.

10.கலைஞர்- கலைஞர்

"கலைஞர் - கலைஞர்" விழாக்குழுவின் சார்பில் "இசையாய் கலைஞர்" காணொலியுடன் கூடிய மெல்லிசை நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் 08.01.2024 அன்று நடத்தப்பட்டது.

11. "தமிழ்த்தாயின் தவப்புதல்வன் - கலைஞர் ",

தமிழ்த்தாயின் தவப்புதல்வன் - கலைஞர் குழுவிற்கு ரூ.25,00,000/- ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் பெயரில் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் நிரந்தர வைப்பாக வைக்கப்பட்டு, அதன் வருவாயை கலைஞரின் பன்முகத் தன்மையை போற்றும் வகையில் பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

12. சமூக நீதிக் காவலர் – கலைஞர்

"சமூக நீதிக் காவலர் - கலைஞர்" - குழு மூலம் கல்லூரிகளில் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

Also Read: ”இந்தியா முழுமைக்கும் ஒளிரப் போகிறது கலைஞரின் நாணயம்” : முரசொலி புகழாரம்!