Tamilnadu
தொழில் வளர்ச்சி & உற்பத்தி : “உலக அளவில் போட்டிபோடும் தமிழ்நாடு...” - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாட்டில் உள்ள குறுந்தொழில் முனைவோரை வலுப்படுத்த தொழில்துறை சார்ந்த ஒத்துழைப்புகள் என்ற தலைப்பில் இந்திய தொழில் முனைவோர் கூட்டமைப்பு நடத்திய மல்டிஸ்டேக்ஹோல்டர் டயலாக் என்ற நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டார்.
அப்போது விழா மேடையில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேசியதாவது, "தமிழ்நாட்டில் 45,000 கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்படவுள்ளது. உணவு, எலக்ட்ரானிக், புதுப்பிக்கப்பட்ட மின் உற்ப்பத்திக்கு முதலீட்டில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் கல்விக்கு முக்கியத்துவத்தை வழங்கி வருகிறது.
இந்திய அளவில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் முதலிடம் பெற்றுள்ளது. 45 ஆயிரம் தொழிற்சாலை தமிழ்நாட்டில் வருகிறது. இந்திய அளவில் 15% சிறு குறு நடுத்தர தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். தொழில் வளர்ச்சி மற்றும் உற்பத்தியில் தமிழ்நாடு மாநில அளவில் இல்லாமல் உலக அளவில் போட்டிபோட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து உபகரணங்களும் மிகவும் தரமாக தயாரிக்கப்படுகிறது, அது பெருமைப்படக்கூடிய விஷயம், நான் முதல்வன் திட்டம் மிக சிறப்பான திட்டம். தமிழ்நாடு செய்யக்கூடிய விஷயங்களை திறமையாக பேச வேண்டும், நீங்கள் கூச்சப்பட்டு அதைப் பேச மறுக்கிறீர்கள். அனைத்து துறைகளிலும் பெண்கள் அதிகளவில் வேலை செய்யும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது" என்றார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேசியதாவது, "படித்த இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் சி.ஐ.ஐ இளம் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவர்களுக்கு அரசு சார்பில் ஒத்துழைப்பு வழங்கி நேரில் இன்று வாழ்த்து தெரிவித்தேன்.
ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி தமிழக அரசு தொடர்ந்து பயணித்து வருகிறது. நகர்புறங்களில் மட்டுமல்லது, கிராமப்புறங்களிலும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தினால்தான் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார என்பது சாத்தியமாகும். எனவேதான் நகரங்களில் மட்டும் அல்லாது டெல்டா, மதுரை, தென்காசி என்று தமிழகம் முழுவதும் பரவலாக்கப்பட்ட தொழில் திட்டமாக கிராமப்புறங்களுக்கு அருகிலும் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து வருகிறோம்.
அவ்வாறு நகர்ப்புறம் அல்லாமல் கிராமப்புற பகுதிகளுக்கு வரும் தொழில் நிறுவனங்களுக்கு மானியமும் கூடுதலாக கொடுக்கிறோம் என்று தொழில் நிறுவனங்களிடம் சொல்லி வருகிறோம். சோலார் மூலமும், காற்றாலை மூலமும் பகலில் நமக்கு தேவையான மின்சாரம் கிடைக்கிறது. ஆனால் இரவு நேரங்களில் மின்சாரத்தை அதிகம் உற்பத்தி செய்யும் வகையில் சோலார் மின்சாரத்தை சேமித்து வைப்பதற்கான பம்பிங் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம்.
இதன் மூலம் மின்சாரத்தை 12 ரூபாய் முதல் 13 ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்காமல் குறைந்த விலையில் வாங்க முடியும். அதுமட்டுமின்றி பசுமை ஹைட்ரஜன் திட்டமும் தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமெரிக்கா பயணத்தின் மூலம் முக்கியமான நிறுவனங்களிடமிருந்து முதலீடுகள் வரப்படவுள்ளது." என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!