Tamilnadu
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழத்தில் "சட்டத் தமிழ்" பாடம்! : அமைச்சர் ரகுபதி!
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுக் கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மையம் இணைந்து நடத்தும் இரண்டாம் உலக தமிழ் வளர்ச்சி மாநாடு பன்னாட்டு தமிழ்மொழி மற்றும் பன்பாட்டுக்கழக தலைவர் டாக்டர் வி ஆர் எஸ் சம்பத் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு செம்மொழியாம் தமிழ் மொழி பற்றி பேசினர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,
மனிதன் எப்போது தோன்றினானோ அப்போதே சட்டம் தோன்றிவிட்டது. சட்டம் என்பது சமுதாயத்தை சீர்படுத்தி, செம்மையாக்கி நல்வழிக்கு உருவாக்கப்பட்ட கருவி தானே தவிர தண்டிப்பதற்காக உருவாக்கியது அல்ல.
தமிழர் வரலாற்றில் சட்டப்பின்னணி உண்டு. செம்மொழியாம் தமிழ்மொழி, சட்டம் பயிலும் மாணவர்களிடம் இருக்க வேண்டுமென கலைஞர் 1973லேயே தமிழ்நாட்டில் சட்டக்கல்லூரிகளில் தமிழில் படிப்பதை முதன்முதலில் தொடங்கினார்.
சமூகத்தை பாதுகாப்பதில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி இந்தியாவிற்கே முன்னோடியாக இருந்து வருகிறது.
1989ல் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என கொண்டு வந்தவர் கலைஞர். ஒன்றிய அரசு 2004க்கு பிறகு தான் இந்த சட்டத்தை கொண்டுவந்தது.
சென்னை உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ் மொழியில் நடைபெற வேண்டும், நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க தொடர்ந்து போராடுவது திமுக தான்.
100சட்டங்கள் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டது.
தமிழில் முன்னோடி சட்டங்கள் இயற்றியது திராவிட மாடல் அரசு.
தமிழ்நாடு முதலமைச்சர், சட்டத்துறை சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் போது மூன்று கோரிக்கைகளை எப்போதும் முன் வைப்பார்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்துடைய கிளை விரைவில் சென்னையில் கொண்டுவர வேண்டும். உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவர்.
37 ஒன்றிய சட்டங்கள் 63 மாநில சட்டங்கள் என மொத்தம் 100 சட்டங்கள் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழில் மொழியில் பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழத்தில் "சட்டத் தமிழ்" என்ற புதிய பாடத் திட்டத்தை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!