Tamilnadu
”மக்களின் இதயத்தை வென்ற வினேஷ் போகத்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு!
பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் மல்யுத்த மல்யுத்த போட்டியில் 50 கிலோ மகளிர் எடை பிடியில் இந்திய வீரர் வினேஷ் போகத் கலந்துகொண்டார். அதில் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் வினேஷ் போகத் சர்வதேச போட்டிகளில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், 4 முறை உலக சாம்பியன், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் யூ சுசாகியை எதிர்கொண்டு அவரை எளிதில் வீழ்த்தினார்.
பின்னர்,காலிறுதிப்போட்டியில் உலகின் 7-ம் நம்பர் வீராங்கனையான உக்ரைனின் ஒல்ஸானா லிவாச்சை வீழ்த்தி வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறினார். அடுத்து அரையிறுதிப் போட்டியில் கியூபாவின் கஸ்மான் லோபசை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் மல்யுத்தத்தில் இறுதிபோட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார்.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் தங்கம் பதக்கம் வெல்வார் என்று நாடே எதிர்பார்த்த நிலையில், 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிக எடை இருந்ததாக கூறப்பட்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் ஏதாவது சதி இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் அவருக்கு ஆதரவாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எங்கள் இதயத்தை வென்றிருக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”வினேஷ், நீங்கள் அனைத்து வகையிலும் உண்மையான சாம்பியன். மன உறுதி, வலிமை, கடந்து வந்த பாதை போன்றவைகளால், இலட்சக்கணக்கான இந்திய பெண்களுக்கு முன்னோடியாக திகழ்கிறீர்கள். ஒரு போட்டியின் தகுநீக்கம் உங்களின் சாதனைகளை மறக்கடிக்காது. நீங்கள் மக்களின் இதயத்தை வென்று விட்டீர்கள்.” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?