Tamilnadu
கலைஞரின் 6-ம் ஆண்டு நினைவு நாள் - முதலமைச்சர் தலைமையிலான அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
சமூக நீதி காத்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (07.08.2024) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திமுகழகம் சார்பில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கலைஞர் செயலாற்றிய திட்டங்களால் பயன்பெற்ற பல்வேறு தரப்பினரும் தங்கள் நன்றியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவச் சிலையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பின்னர் சென்னை அண்ணா சிலையில் இருந்து மெரினா வரை முதலமைச்சர் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, தயாநிதி மாறன் எம்.பி., ஆ.ராசா எம்.பி., டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, தங்கம் தென்னரசு, பொன்முடி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர். இந்த பேரணியின்போது வழி நெடுகிலும் மக்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அமைதிப் பேரணி முடிந்து, சென்னை மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பின்னர் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் மரியாதை செலுத்தினார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்