Tamilnadu
6-வது முறையாக சிகரத்தில் ஏறும் முத்தமிழ்ச்செல்வி... ஊக்கத்தொகையாக திமுக MLA ரூ.1 லட்சம் நிதியுதவி !
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி (35). திருமணமான இவர் தனிப்பட்ட முறையில் மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் வெளிநாட்டு கம்பெனிகளில் பணியாற்றுபவர்களுக்கு ஜப்பான் மொழி பெயர்ப்பாளராக இருந்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்த ஐரோப்பா போன்ற கண்டங்களிலும் உள்ள அனைத்து பனிமலைகளில் ஏறி உச்சியை தொடவேண்டும் என்பது ஒரு கனவாக இருந்து வந்துள்ளது.
அதற்கான பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் தீவிர முயற்சிக்கு பிறகு முதன்முதலாக ஆசிய கண்டத்தில் உள்ள பனி மலையில் ஏறி உச்சத்தை தொட்டார். இரண்டாவதாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள மெளன்ட் எல்ப்ரஸ், மூன்றாவதாக ஆப்பிரிக்கா கண்டம் மெளன்ட் கிலிமஞ்சாரோ மலையில் ஏறினார்.
அதனை தொடர்ந்து நான்காவதாக தென் ஆப்பிரிக்கா கண்டம் மெளன்ட் அகன்ககோவா மலை, ஐந்தாவதாக ஆஸ்திரேலியா கண்டம் மவுண்ட் கெசியஸ்கோ மலை என ஐந்து கண்டங்களில் உள்ள பனி சிகரத்தின் உச்சத்தை தொட்டுள்ளார். இந்த சூழலில் 6-வதாக மீண்டும் முத்தமிழ்ச்செல்வி அண்டார்ட்டிகா கண்டத்தில் உள்ள சிகரத்தை தொடவுள்ளார்.
அதன்படி வரும் நவம்பர் மாத இறுதியில் அண்டார்ட்டிகா கண்டத்தில் உள்ள மிக உயரமான பனி மலையின் உச்சத்தை தொடவுள்ள சாதனை பெண் முத்தமிழ்ச்செல்விக்கு உதவிடும் வகையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது செங்கல்பட்டு திமுக MLA வரலட்சுமி மதுசூதனன் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். காசோலையை பெற்றுக்கொண்ட முத்தமிழ்ச்செல்வி MLA வரலட்சுமிக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டு கலந்துரையாடினார். இவரைத் தொடர்ந்து பிளாட்டினம் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
கடந்த 9 மாதங்களில் 5 கண்டங்களில் சிகரத்தை தொட்டு, ஆறாவதாக அன்டார்ட்டிகா சென்று சிகரம் தொடவுள்ள தமிழக சாதனை பெண் முத்தமிழ்ச்செல்விக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
Also Read
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!
-
மருத்துவப் படிப்புகளுக்கான 135 காலிப்பணியிடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு! : இன்று முதல் தொடக்கம்!